பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 109



மாடிக்குப் பளிங்குக்கல் அமைக்கப் பணம் கேட்கவில்லை. குடிசையில் படுத்துறங்கும் போது பசியால் சிறுகுடலைப் பெருங்குடல் தின்று விடாதபடி தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே கூலி கொஞ்சம் கூட்டிக் கொடுக்கும்படி கேட்கிறார்கள்.

"உலகம் மாயை இல்லை; உழைப்பவன் வாழ்வும் மாயமன்று; ஆனால் உழையாதவன் உல்லாசத்தில்தான் மாயம் இருக்கிறது” --பேரறிஞர் அண்ணா.

ஓடப்பர் தரும் பகட்டுகள்

"முழு வயிறு காணாதோர்
முதுகெலும்பு முறியப் பாடுபடுவோர்.
வாழ்வின் சுவை காணார்,
வலியோரின் பகடைக் காய்கள்,
ஓடப்பர்
ஆகிய இவரெல்லாம்
தருகின்ற வரிப்பணமே
கோட்டைகளாய்,
கொடி மரமாய்,
பாதையாய்,
பகட்டுகளாய்,
அமுல் நடத்தும் அதிகாரிகளால்
அறிவு பெற அமையும்
கூடங்களாய்த் திகழ்கின்றன. --அண்ணா.

சந்தா செலுத்துவது அவசியம்

ஒரு தொழிற்சங்கம் போதுமான நிதி வசதி இல்லாமல் -- தன் சொந்தப் பலத்தை நம்பி நிற்கவோ அன்றி சுதந்தரமான அமைப்பாகச் செயல்படவோ, எதிர்பார்க்கும் பணிகளைத் தொழிலாளர்களுக்குச் செய்யவோ முடியாது.

தொழிற்சங்கத்தின் நிதிவசதி போதுமானதாக--தொடர்ச்சியானதாக -- தனது உறுப்பினர்களிடம் இருந்து