27 களில் உரப்பியும் கனைத்தும் எடுத்தும் ஒலிக்கப்படும் எழுத்துக்கள் அவ்வவ் விடங்களின் தட்ப வெப்ப நிலைகட் கேற்றவாறு தோன்றிய திரிபொலிகளேயாகும். எனவே, தமிழ் மெய்யெழுத்துக்களும் முற்றிய இயல்பொலி உடை யனவே யாம். 10:40 சங்கம், வஞ்சம், பண்டம், மந்தம், கம்பம் என மெல் லொற்றை அடுத்து வரும் 'கசடதப, என்னும் வல் லெழுத்துக்கள் ஐந்தும் மெலிந்து ஒலிப்பதால், இவற் றையே அயல்மொழியாளர்கள் உரப்பியும் கனைத்தும் எடுத்தும் ஒலிக்கும் வெவ்வேறு எழுத்துக்கள் ஆக்கிக் கொண்டனர். "தமிழ் அல்லது திராவிட எழுத்துக்களைத் தாம் உலக மொழியாளர்கள் தங்கள் மொழிகளுக்குக் கொண்டனர். என்னும் ஆங்கிலக் கலைக்களஞ்சியக் கூற்றும் இதற்குச் சான்றாகும். லும் அயலெழுத்தாக்கத் தமிழெழுத்துக்களால் எல்லா அயல்மொழிச் சொற்களையும் பொருள் விளங்க எழுத முடியும். ஆனால், பிற மொழிகளில் ஒத்த குறிலும் நெடி இன்மையோடு, வடமொழியிலும் இந்தியிலும், 'றனழ' என்னும் மெய்களில்லை. ஆங்கிலத்தில் “ந ண ன - N, ல ள ழ - L, ர, ற - R ' எனப் பொதுவாக உள்ளனவே யன்றித் தனித்தனி மெய்களில்லை. ஆகவே, தமிழ்ச் சொற்களை அவ்வயல்மொழி எழுத்துக்களால் பொருள் விளங்க எழுதமுடியா என்பதைக் கீழ்வரும் எடுத்துக் காட்டுக்களால் அறியலாம். தமிழ் நெடுஞ்செழியன் பொன்னன் நெடுமாறன் வடமொழி நேடுஞ்சேளியந் போந்தந் நேடுமாரந்
பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/28
Appearance