உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

விடுதலைப் போர்


களின் சுதந்திரங்களைக் காப்பாற்றவே, பிரிட்டன் சீறிப் போரிட்டது என்ற போர் நோக்க விளக்கத்தையும், மறந்துவிடத் துணிகிறார்களா என்று கேட்கிறோம். ஒருகோடி முஸ்லீம் ஒரே இடத்திலே வாழ்ந்து, வேற்றானிடம் அடிமைப்பட்டு இருக்கின்றனரா? இல்லை! எங்கும் தாருல் இஸ்லாம்! இங்கு மட்டுமே 10 கோடி முஸ்லீம்கள், அடிமை வாழ்வில் இருந்தனர். நாலு கோடி பேர், எங்காவது நயவஞ்சகரின் நாட்டியப் பொம்மைகளாகி உள்ளனரா? இல்லை ! திராவிடருக்கு மட்டுமே அக்கதி! இரு இனமும் இக்கதி பெற்றதன் காரணம், பூகோளப் பித்தலாட்டமன்றி வேறென்ன? பூகோளத்தை விஞ்ஞானமும், இன எழுச்சியும் மாற்றியிருப்பதை யார் மறுக்க முடியும்? பூகோளத்துடன் விஞ்ஞானம் சேரவில்லையானால், சூயஸ்கால்வாய் ஏது? சொகுசான வியாபார வாழ்வுமேனாட்டாருக்கு எங்ஙனம் கிடைத்திருக்க முடியும்?

அயர்லாந்திலே ஒரு அல்ஸ்டர் ஏற்படுவதற்குள்ள காரணங்களைவிட ஆயிரமடங்கு அரிய பெரிய, சரித ஆதாரமுள்ள காரணங்கள், பாகிஸ்தான், திராவிடநாடு பிரிவினைக்கு உண்டு. மே.த. வைசிராய் பூகோளபோதனையை மறந்து சரிதத்தைச் சான்றுக்கழைக்க வேண்டும்.

நாலு கோடி "நாடாண்ட இனம்" தன்னரசுபெற உரிமை உண்டு. உரிமைப்போர், உபதேசத்தினால், மங்கிவிடாது.