உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கO. சிறப்பியல்புகள்

நாட்டறிஞர்கள், கூத்து

மூவொற்றுமை :-யவன நூலில் வரும் வரலாறு முழுதும் ஒரே இடத்து நிகழவேண் டும்; ஒரே காலத்தில் நிகழ்தல்வேண்டும்; புனைந்துரையும் பல வாகிக் கலங்காது ஒன்றாகித் தெளிதல்வேண்டும் என்று வற் புறுத்துகின்றனர்; இட ஒற்றுமை, காலவொற்றுமை புனைந் துரை ஒற்றுமை (Unite of place, time and story) என்ற இம் மூவொற்றுமையையும் வேண்டுவர். இப்புனைந் துரை அவ்வாறமைந்துள்ள தன்றோ?

யானையே நடுவிடம்:- பலவகையான மனக்கொந்தளிப்பு. களும் யானையைச் சுற்றியே எழுகின்றன. ஆதலின் யானையே இப்புனைந்துரையின் நடுவிடம் என்றோம். சிவகாமியாண்டாரு டைய அன்பைக்காட்டும் முதற் காட்சியிலும், யானையே வந்து பூவைச் சிந்தி, இப்புனைந்துரையில் அவரைச் சிக்க வைக்கின் றது. அம்முறையீட்டைக் கேட்ட எறிபத்தர், இரண்டாங் காட்சியிற் சிக்குண்டு யானையைச் சென்று வெட்டுகின்றார். யானை வெட்டுண்டதைக் கேட்ட சோழர், ஆற்றாமை சோழர்,ஆற்றாமை மீதூரப் பெற்றுத் தம் படையொடும் வந்து, மூன்றாங் காட்சியில் சிக்குண்கிறார்; யானை இறந்ததாலன்றோ படை எடுக்கின்றார். இன்மை முகத்தால்,யானை,அங்கும் விளங் கிப் புனைந்துரையை இயக்குகின்றது. நான்காம் காட்சியில் அவ்வானை யெதிரே, எறிபத்தரும், புகழ்ச் சோழரும், வாளோடு கையுமாய், இறப்பதற்கு 'யான் முந்தி, நீ முந்தி' எனநின்று, சிக்குண்டு விளங்குகின்றனர். ஐந்தாங் காட்சியில், அவ்வானை உயிர்பெற்றெழுந்து, எறிபத்தரது அன்போடு அரசனையும் மேற்கொண்டு அழகோடு செல்கிறது. எனவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/79&oldid=1559718" இலிருந்து மீள்விக்கப்பட்டது