உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

மே தினம்

றனர். திராவிடர் கழகம் அதிகாரபூர்வமாகவே அறிக்கை வெளியிட்டு, அடுத்த ஆண்டு மே தின விழாவைத் தமிழ் நாடெங்கும் கொண்டாட ஏற்பாடு செய்யும் என்று நம்புகிறேன்.

மே தினம் என்ற உடனே, சர்க்காருக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டோ, எந்த விழாவிற்காகவோ ஒன்று திரண்டால், இன்றைய ஆட்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர் — சங்கடப்படுகின்றனர். நான் இந்தப் போக்கைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. சர்க்காரின் சுபாவம் அது. ஆனால் நம்முடைய கட்சி நண்பர்களிலேயே சிலருக்குச் சந்தேகம் உண்டாகிறது; மே தினத்தை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? அந்த விழா கம்யூனிஸ்டுகளல்லவா கொண்டாட வேண்டும்; நமக்கு எதற்கு அந்த விழா? என்று எண்ணுகின்றனர். இது ஓர் தவறான கருத்து.

மே தினம், கம்யூனிஸ்டுக் கட்சியின் ஏகபோக மிராசுப் பாத்யதை அல்ல. மே தினம் கம்யூனிஸ்டுக் கட்சி ஆள வந்த பிறகு ஏற்பட்ட சம்பவமும் அல்ல. மே விழா, ரஷியாவிலே அல்ல முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது. மேதினி எங்குமே மே தினம் கொண்டாடப்படுகிறது. இதே நேரத்தில், உலகிலே பல்லேறு பட்டணங்களிலே, மே விழா, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்டாலின் பேசிக் கொண்டிருப்பார், மாஸ்கோவில். அதுபோன்ற ஒவ்வோர் தலைநகரிலும், தலைவர்கள் மே தினத்தைக்கொண்டாடிக் கொண்டிருப்பார். புரட்சித் தினம்,