உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
142 ||

அப்பாத்துரையம் - 6



பூரண சக்தியையும் ஜெர்மனிக்கு எதிராக உபயோகித்தது குறிப்பிடத்தக்கது. பிரஞ்சு, இத்தாலியுட்பட ஐரோப்பாவின் பெரும் பாகமும் ஜெர்மன் கட்டுப்பாட்டுக்கும் அதிகாரத்துக்கும் வெளியே இருந்தன. இப்பொழுதோ, ருஷ்யா நீங்கலாக ஐரோப்பா முழுதுமே ஜெர்மன் ஆதிக்கத்தில் இருக்கிறது. ருஷ்யப் பிரச்னையொன்று தான் ஜெர்மனியை எதிர்நோக்கியுள்ளது. நேச நாட்டார் இத்தாலியிலும் பிரான்ஸிலும் நுழைந்தது ஜெர்மானியருக்குத் தொந்தரவாக இருந்தபோதும், புதியதோர் விறுவிறுப்புக் காணப்படுகிறது. அதனால் ஜெர்மானியரிடம் பிரிக்க முடியாத கட்டுப்பாடு உரம் பெற்று விட்டது. தங்கள் நாட்டுக்குள்ளேயே போரை நடத்த இத்தாலியும் பிரான்ஸும் மனப்பூர்வமான ஆதரவு தரவில்லை. நேச நாட்டார், இத்தாலிய மன்னரையும் மாஜி பிரதமர் படாக்ளியோவையும் ரகசியமாகத் தங்கள்பால் அணைத்துக் கொண்டிருப்பது, இத்தாலிய மக்களிடையே வெறுப்பை உண்டாக்கியிருக்கிறது. அதைப் போலவே தான் பிரஞ்சு மக்களும் வறுப்படைந்திருக்கின்றனர். இந்த எனது அறிக்கையை யாரேனும் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், அவர்கள் பிரான்ஸிலிருந்து வெளிவரும் அமெரிக்கச் செய்திகளை மட்டும் படிப்பவர்களாகத்தான் இருக்க முடியும்.

எப்படியும் பிரிட்டிஷார் தான் இறுதி வெற்றி பெறுவார் களென்றும், அவர்கள்தான் யோகசாலிகள் என்றும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனரென்பது எனக்குத் தெரியும். குறுகிய மனோபாவமுடையவர்கள்தான் அப்படி நினைக்க முடியும். சரித்திரம், பெரும் சக்தி கொண்டது; அதில் காணப்பெறும் நிகழ்ச்சிகளெல்லாம் எதிர்பாராதவையல்ல. ஆகவே ஐரோப்பாவில் இன்று நடப்பவை எந்த அஸ்திவாரத்தின் மீது நடக்கின்றன? எந்தவிதமான முடிவுக்கு வரும்? என்பவைகளை நாம் கண்டுகொள்ள வேண்டும்.

1939-ஆம் ஆண்டு முதல் 1942 வரையுள்ள ஐரோப்பாவின் நிலைமையைச் சொல்லிவிட்டு, இப்பொழுதுள்ள ஐரோப்பாவின் விமர்சனத்துக்கு வருகிறேன். 1940, 1941, 1942 இவ்வாண்டு களில் பிரிட்டிஷாருக்கு மிகவும் பயங்கரமான கட்டமிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். பிரிட்டன் ஒவ்வொரு யுத்த