உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
198 ||

அப்பாத்துரையம் - 6



முனைந்தான். ஆனால், ‘ஆட்சிக் கருவி' ஆளும் பீடத்தில் அமர்ந்தபின் ஆளத் தெரியாதவன் ஆகத் தலைப்பட்டான.

ஹைதரின் வலிமை அவனுக்குத் தெரியும். ஆனால், அவன் உள்ளங்கை ஹைதரின் குறைப்பாட்டையும் நெல்லிக்கனிபோலக் கண்டான். ஹைதரை எதிர்த்து வெல்லுவது அருமை. ஆனால், சூழ்ச்சியால் அவனை வீழ்த்துவது எளிது. எனவே, குந்திராவ் வெளித்தோற்றத்தில் நண்பனாகவே நடித்தான். உள்ளூர, மன்னனை ஹைதருக்கெதிராகத் திருப்பி வந்தான். மன்னனுக்கு அவன் மீது பொறாமை ஏற்படும்படி செய்தான்.

"மன்னரே, தாங்கள் ஆளும் மரபில் பிறந்தவர்கள். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற இயற்கைப் படியில், தாம் அரசர் மரபினர். நானோ அமைச்சர் மரபினன். அப்படியிருக்க, பிறப்பால் நீசன், சமயத்தால் வேறுபட்ட முசல்மான், நம் மைசூர் அரசுக்கு வெளியேயிருந்து வந்த ஒரு முரடன் - இப்படிப்பட்டவன் நம் நாட்டில் - நம் ஆட்சிக் கயிற்றில் கை வைப்பதா? இதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? மானமுடைய மன்னர் மரபுக்கு, மாளாத நம் வைதிக நலனுக்கு இது இழுக்கல்லவா?" என்று அவன் மன்னன் மனத்தில் சாதிமத வேறுபாட்டுக் கருத்துக்களைப் புகுத்தினான்.

மன்னன் மனம் கரைந்தது. ஆனால், ஹைதரைப் பகைத்துக் கொள்ள அஞ்சினான். எனினும், குள்ளநரிக் குடிலனான குந்திராவ், மன்னனுக்குத் தேறுதல் தந்தான். எதிர்க்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். அரசே! நீங்கள் செய்யவேண்டுவது வேறு எதுவுமல்ல; நான் சொன்னபடி நடந்து கொண்டால் போதும். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் அவன்.

மன்னன் மனத்தைக் கரைத்த பின், குந்திராவ் நாட்டின் எதிரியாகிய மராட்டியப்பேரரசன் பேஷ்வாவைத் தன் கருவியாக்கத் துணிந்தான். தான் பேஷ்வாவின் வகுப்பினன் என்பதை அவனுக்கு நினைவூட்டினான். ஹைதரின் மரபையும் குடியையும் இழித்துக் கூறினான். இவை போதாவென்று பேஷ்வாவின் பண ஆசை, ஆட்சி ஆசையையும் அவன் தூண்டினான்.மைசூரின் மீது படையெடுத்து, ஹைதர் அழிவுக்கு