உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 99

கலிங்கத்துப் பரணியில் பாடப்பட்டது. ஒட்டக்கூத்தரும் இதே வெற்றி குறித்துப் பாடியதாக அறிகிறோம்.

குலோத்துங்கன் பேரரசு கிட்டத்தட்ட இராசேந்திரன் பேரரசின் அளவிலேயே இருந்தது. இலங்கையும் மைசூரும் குறைந்தன. ஆனால், கலிங்கம் விரிவு பெற்றது.

குலோத்துங்கன் நல்லாட்சிக்கு இருசெயல்கள் சான்று பகர்கின்றன. ஒன்று, இராசராசனைப்பற்றி 1086, 1116 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற பேரரசின் நிலப்பேரளவை, இன்னொன்று; உள்நாட்டு வாணிகத்தைச் சீர்செய்வதற்காக அவன் சுங்கங்கள் ஒழித்தது. முந்திய செயலில் அவன் நீணிலமளந்த சோழன்என்றும், பிந்திய செயலால் சுங்கம் தவிர்ந்த சோழன் என்றும் புகழப்பட்டான்.

குலோத்துங்கன் காலத்தில் சோழர் ஆட்சியின் புகழ் உலகெங்கும் பரந்திருந்தது. 1077-ல் அவன் சீனப்பேரரசனுக்கு ஓர் அரசியல் தூதனை அனுப்பியிருந்தான். பத்தாண்டுகளுக்கு முன் சீன அரசனுக்குத் தூதனுப்பிய சீர்விசயப் பேரரசன் பெயரும் குலோத்துங்கன் பெயராயிருப்பதால், இளவரசனாகவே அவன் அப்பேரரசின் மேலாட்சியுரிமை பெற்றிருந்தான் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அத்துடன் குலோத்துங்க காலத்துச் சீர்விசயப் பேரரசன் அவனிடம் தன் அரசியல் தூதனுப்பி நாகப்பட்டினத்துப் புத்த விகாரத்துக்குச் சில நன்கொடைகள் பெற்றான் என்று அறிகிறோம்.

காம்போஜ அல்லது சயாம் நாட்டரசன் தன் மகனுக்கும் குலோத்துங்கனைக் கொண்டு அவன் பெயரிட்டதாகவும் கேள்விப்படுகிறோம். இம்மன்னன் அனுப்பித் தந்த ஓர் அருங்கல் சிதம்பரம் கோயில் மதிலின் பகுதியாகப் பதிக்கப்பெற்றது.

1088-ல் சுமாத்திராவிலுள்ள ஒரு தமிழ்க்கல்வெட்டு அங்கே திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்ற பெயருடன் ஒரு தமிழ் வாணிகக்குழு இருந்ததென்று குறிக்கிறது.

கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் மதிலில் 111-ல் குலோத்துங்கனுடன் கங்கைவெளியில் கன்னோசியிலுள்ள அரசன் செய்து கொண்ட உடன்படிக்கை குறிக்கப்பட்டுள்ளது. இதே காலத்தில் கன்னோசி அரசன் கோவிந்தசந்திரன்