உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




188

||--

அப்பாத்துரையம் - 11

அங்கமாக, பிரிட்டிஷ் ஆட்சியாளர் ஒரு புதுவகை ஏகாதிபத்தி யத்தையே உருவாக்கினர். அதுவே இந்திய ஏகாதிபத்தியம் (Indian Empire). அது பெயரளவில், கொள்கையளவில் பெரிய ஏகாதிபத்தியத்தின் ஓர் உறுப்பானாலும், உண்மை நிலையில், செயலளவில், தானே ஒரு ஏகாதிபத்தியமாக ஏகாதிபத்திய அங்கமாக அமைந்ததுடன், உருவிலா ஏகாதிபத்தியத்தின் உருவுடைய ஏகாதிபத்திய உடலாகவும் நிலவிற்று. உருவிலா ஏகாதிபத்தியம் உலகில் பாதியானால், இந்த உருவுடைய ஏகாதிபத்தியம் அவ்வுருவிலா ஏகாதிபத்தியத்தில் பாதிக்கு மேலாகவும், உலகில் ஒரு மாபெரும் பகுதியாகவும் இருந்தது. அத்துடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வலிமை, வளம், இதயம், உயிர் நாடியாக அது இயங்கிற்று.

க்காரணங்களால் பிரிட்டிஷார் அடிக்கடி தம் ஏகாதிபத்தியத்தையே மறந்து, இந்திய ஏகாதிபத்தியத்தையே தம் ஆட்சிக்குரிய பெருமையாகக் கொண்டனர். ஏகாதிபத்தியம் என்று அவர்கள் கூறும்போது, இந்திய ஏகாதிபத்தியமே அவர்கள் மனக் கண்முன் வீறுடன் நின்றது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முடிசூடிய தலைமையைக் குறிக்க அவர்கள் வழங்கிய தொடர் இதைக் காட்டுகிறது. அவர் பிரிட்டிஷ் சக்கரவர்த்தி என்றோ, பிரிட்டனின் சக்கரவர்த்தி என்றோ, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சக்கரவர்த்தி என்றோகூட அழைக்கப்பெறவில்லை. பிரிட்டனின் மன்னர், இந்தியாவின் சக்கரவர்த்தி என்றே அழைக்கப்பெற்றார்.

பிரிட்டனுக்கோ, வேறு எந்தப் பகுதிக்கோ அவர் சக்கர வர்த்தியல்லர், மன்னரே! இந்தியாவுக்கு மட்டுமே - இந்தியா தேசத்துக் கல்ல, அப்படி ஒன்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலோ - அல்லது எக் காலத்திலோ இருந்ததில்லை இந்திய ஏகாதி பத்தியத்துக்கு மட்டுமே அவர் ஏகாதிபத்தியத் தலைவர் அல்லது சக்கரவர்த்தியாகக் கருதப்பட்டார். அத்துடன் இந்திய ஏகாதிபத்தியத்தின் தலைவர் ஒருவர் மட்டுமே அரசப் பிரதிநிதி (Viceroy) என்ற தனிப்பெருமை வாய்ந்த பட்டத்துக்கு உரியவராயி ருந்தார். அவருக்குத் தரப்பட்ட மதிப்பும், அவர் வாழ்க்கை ஆரவாரமும், அவர் கொலுமண்டப ஆடம்பரமும், ஊதியமும், சம்பளப்படிகளும், அதிகாரங்களும் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்துக்கு உள்ளோ, வெளியிலோ உலகில் வேறு எங்கும், எவருக்கும் அளிக்கப்படாதவையாய் இருந்தன.