உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

215

பிராமணரைச் சேர்க்காமலிருந்து சமத்துவத்தில் தம் அக்கறை தெரிவிக்க வேண்டுமென்றும், காந்தியடிகள் இதனைப் பிராமண அன்பருக்குப் பரிந்துரைக்க இணங்கினால், தாம் காங்கிரசில் சேருவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

காந்தியடிகள் சென்னை வந்தபோது நீதிக்கட்சித் தலைவர்கள் அவரை நேரில் பேட்டி கண் டு து செய்தி தெரிவித்தனர்.

உலகப் பெரியாரானாலும், காங்கிரசை உயிராகக் கொண்டவர் காந்தியடிகள். அவர் உள்ளம் பூரித்தது. 'ஐந்தாண்டுகள்தானா? ஐம்பது ஆண்டுகள் கேட்க நான் ஒத்துக் கொள்கிறேன். சென்னைப் பிராமணருடன் நீங்கள் நெருங்கிப் பழகவில்லை. அவர்கள் எவ்வளவு நல்லவர்களென்பது உங்களுக்குத் தெரியாது. நான் கேட்டால் உங்கள் மகிழ்ச்சிகரமான முடிவுக்கெதிராக, ஐம்பதென்ன, நூறாண்டு கேட்டால்கூட அவர்கள் தாராளமாக இணங்குவார்கள்! சக்ரவர்த்தி இராச கோபாலாசாரியார் போன்ற அருளாளர் நிலையாகக்கூட ஆத்மிக சேவையிலிறங்கும்படி தம் தோழர்களைத் தூண்டத் தக்கவர் என்பதில் எனக்கு ஐயமில்லை' என்றார் அடிகள்.

இப் பேச்சு விவரம் கேட்ட சென்னைப் பத்திரிகைகள் ப் கலகலத்தன. வெள்ளையுள்ளம் படைத்த காந்தியடிகளை அரசியல் சூழ்ச்சியில் சிறந்த நீதிக் கட்சியாளர் குழியில் தள்ளி விட்டதாகக் குமுறினர். காந்தியடிகளிடம் சென்று வாதித்து, அம் முடிவை மறந்துவிடும்படி வற்புறுத்தினர்.

கண்ணன் காட்டிய வழி' மகாத்மா வழியாயிற்று.

கண்ணன் காட்டிய வழியில் முதலில் வேண்டா விருப்புடன் சென்றவன் ‘சத்திய வீர’ னாகிய விசயன். பாரதக் கதையிலே இரண்டாவதாக அவ்வழியில் வேண்டா வெறுப்புடனே நின்றவர் துவாபர யுகத்தின் ‘சத்தியவீர’ரான தருமபுத்திரர். மூன்றாவதாக வேண்டா வெறுப்பாகவோ, விரும்பா வெறுப்பாகவோ நின்றமையத் தூண்டப்பட்டவர் நம் கலிகால தருமபுத்திரர், தற்காலச் சத்திய விரதரான காந்தியடிகளே!