உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(222)

||--

அப்பாத்துரையம் 11

து

திராவிடப் பண்பாடு வெற்றிகரமாக வளர்ந்துவிட்டதென்று நாமும் ஒத்துக் கொள்ளலாம். அத்தகைய இன உயர்வு தாழ்வு வேறுபாடற்ற நிலையே திராவிடப் பண்பாட்டு நிலை. ஆனால், ஆரியதிராவிட இன எல்லை அழிப்பதால் மட்டும் இது உண்டாவதல்ல. ன எல்லை யழிந்தபின் நிலவும் பண்பு திராவிடப் பண்பானாலும், இரண்டு இனங்களும் சரிசம அடிப்படையில் இயங்கி ஒருமைப்பட வழி இருக்கலாம். ஆனால், இன்று இன எல்லை அழிக்கப்பட்டதாகக் கூறமுடியாது. நேர் மாறாக, ஆரியர் ஒரே ஆரிய இனமாகவும் இல்லை. திராவிடர் ஒரே திராவிட இனமாகவும் இல்லை. ஆரியருக்குள்ளும் பலவகை வேறுபாடுகள், உயர்வு தாழ்வுகள் உள்ளன. திராவிடருக்குள்ளும் அதே நிலைதான். இத்தனை உயர்வு தாழ்வுகளையும் ஐயங்கார், ஐயர், முதலியார், செட்டியார், மறவர், குறவர், தீண்டப்படாதார், அணுகப்படாதார், மலங்குடிகள், காட்டுக்குடிகள் இத்தனையை யும் பொறுத்துக்கொண்டு இவற்றை மாற்ற விரையும், மாற்றத்துடிக்கும் திராவிடப் பண்பாடு, திராவிட இலக்கியம், திராவிட இயக்கம் ஆகியவற்றையும் நசுக்க எண்ணும் ஆரியம்தான் இன்று ஆரியமாவது, திராவிடமாவது என்று பசப்பி, இந்த உயர்வு தாழ்வு வேறுபாடுகளை நிலவரமான வையாக்கப் பார்க்கிறது.

தவிர, இனவேறுபாடு வேறு, இனவாழ்வு வேறு. இன வேறுபாடு பழக்க வழக்கங்களைப் பொறுத்தது; பண்பாட்டைப் பொறுத்தது. ஆனால், இனவாழ்வு என்பது அந்த இனத்தின் உறுப்பினர் தன்னலம் கடந்த பொதுமைப் பாசம், அதற்கு உதவும் இன மரபுகள், பண்பு மரபுகள், உயர் இனக்குறிக்கோள்கள் ஆகியவற்றைச் சார்ந்தது.திராவிட நாட்டுக்கு எவ்வளவு இயற்கை வளம் உள்ளதோ, அதே அளவு திராவிட இனத்துக்குப் பண்புவளம், மொழி வளம், இலக்கிய வளம் ஆகிய மூன்றும் உலகில் வேறு எந்த இனத்தையும்விட மேலை, இனங்களை விடக்கூட மிகுதியாக உள்ளன. இனமும் சமயமும் மட்டுமன்றி, காலமும் தேசமும் கடந்த தமிழ் வள்ளுவர் பொதுமறைவழி, புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள் நாயகம் ஆகியவர்கள் வழிகளைப் போலத் தனி மனிதர் வழிமட்டும் அன்று. அது திராவிட இனத்தில் தோன்றி முளைத்து மலர்ச்சியடைந்த திராவிட இனநெறி. ஏனெனில் அதுவே தொல்காப்பியத்தின்