உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

233

என்ற புது வழக்குப் படைத்துப் புதுப்புது பெயரிட்டிருக்கிறார்கள். அதைக் கடவுள் நெறி என்று - இயற்கை முறை என்று காட்டவே, மொழிகளில் வருணாசிரமம் (வேதமொழி, பொதுமொழி, சமஸ்கிருதம் ஆகியவை பூசுரர் பிராமணர் மொழி; பிராகிருதம், பாலி ஆகியவை வைசிய மொழிகள்; வட இந்தியத் தாய்மொழிகளான இந்தி முதலியவை சூத்திர மொழிகள் (பேய் மொழிகள்) என்றும், எழுத்துக்களில் வருணாசிரம் (உயிர் எழுத்து பிராமண எழுத்து, வல்லெழுத்து க்ஷத்திரிய எழுத்து; சார்பெழுத்துக் கலப்பினத்தவர், பஞ்சமர், சண்டாளர்) என்றும், பாவகைகளில் வருணாசிரமம் (வெண்பா பிராமணர்,ஆசிரியப்பா க்ஷத்திரியர், கலி வைசியர், வஞ்சி சூத்திரர், கம்பர் கால விருத்தம் போன்ற பாவினங்கள், பஞ்சமர்; நாடக சினிமாப் பாட்டுக்கள் சண்டாளர்) என்றும், கிரக இராசிகளில் வருணாசிரமம் (பிரகஸ்பதி அல்லது வியாழன் பிராமணன்; சனி சூத்திரன்; இராகு பஞ்சமன்; கேது சண்டாளன்) என்றும், தமிழிலேயே ஆரியப் பண்பாளர் இடைக்காலத்தில் அரும்பாடுபட்டு வகுத்துள்ளனர். இனமலர், இன வண்டு, இனப்பரிமா ஆகிய பண்பார்ந்த தமிழ்ச் சொற்களைக் கூட மெள்ளசாதி மலர், சாதி வண்டு, சாதிக் குதிரை என மாற்றி, இன்றைய தமிழரிடை இம்மாறுபட்ட வழக்குப் புகுத்தப்பட்டு வருகிறது.

ஆரியம் மிகுதியாக நுழையாத பகுதி - எப்படியும் இந்தி யாவில் உருவாக்கப்பட்ட செயற்கை ஆரியத்தை அறியாத பகு மேலை உலகு. ஆனால், அங்கேகூட னக் கலப்பால் ஆப்பிரிக்காப் பகுதியிலுள்ள வெள்ளையர்களிடையே நிற வேறுபாடு நிலவுகிறது. இது இயற்கை வேறுபாடு; வெளி நாகரிக வேறுபாடு மட்டுமே. அத்துடன் தன்னலம், குழு நலம், ஆட்சி வகுப்பு இறுமாப்பு, நிற இறுமாப்பு ஆகியவை இவற்றுக்குச் சற்று வலிமை தந்துவிடுகின்றன. ஆனாலும் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள வேறுபாட்டுடன் இது ஒப்பிடத்தக்கதன்று. ஏனெனில், இங்கே துணைக் கண்டத்தின் வேறுபாடு வேறு வேறு மொழி பேசும் வேற்று நாட்டாரிடையேயன்று; ஒரே மொழி பேசுபவர், ஒரு நாட்டில், ஊரில், தெருவில் வசிப்பவர்களிடையே - மலையாள நாட்டில் ஒரு குடும்பத்த வரிடையே கூட நிலவுகிறது. இரண்டாயிர மூவாயிர ஆண்டுகளாக ஒருங்கே வாழ்ந்து வருபவர்களிடையே நிலவுகிறது! இது து மட்டுமோ?