பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

33

முத்திருளப்பபிள்ளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளை நேரில் பார்வையிட்டு குடிமக்களது குறைகளை உணர்ந்து, வரிவிதிப்பு முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

முதன்முதலாக, தமது நாடு முழுவதிலும் உள்ள காணிகளை அளந்து கணக்கிடும் முறையை பிரதானி முத்திருளப்பபிள்ளை ஏற்படுத்தினார். நிலங்களை அளப்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு விதமான முழக்கோல் பயன்படுத்தப்பட்டதால் அந்த முறையை நீக்கி நாடெங்கும் ஒரேவிதமான அளவினை ஏற்பாடு செய்தார். அதற்காக தனது நீண்ட காலடி நீளத்தின் அளவை ஆதாரமாகக் கொண்ட பிள்ளைக்குழி' அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. முக்கால்படி விதை தேவைப்படுகிற இருபத்திரண்டு அடிக்கு ஒரு அடி என்ற சதுரபரப்பு அளவுடையது அந்தக் குழி. இதன்படி ஒருகல விதையடி நிலம் 112 குழிகள் என கணக்கிடப்பட்டன.[1] இந்த நிலங்களுக்கு ஆதாரமாக இருந்த நூற்றுக்கணக்கான கண்மாய்கள் சீரமைக்கப்பட்டன. இராமநாதபுரம் பெரிய கண்மாய் சிறப்பாகப் பழுது பார்க்கப்பட்டது. இந்த கண்மாய்களின் ஆதாரமான வைகை ஆற்று நீர் ஆண்டு தவறாமல் ஒழுங்காக கிடைப்பதற்காக வைகை உற்பத்தியாகும் வர்ஷநாடு மலைப்பகுதியில் வைகையின் நீர்வளம் பற்றிய ஆய்வு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது செய்யப்பட்ட ஆய்வின்படி வைகைநதி வளத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் மறவர் சீமையின் தென்கிழக்குப் பகுதிக்குப் பருவகால மழை வெள்ளத்தினால் ஆண்டுமுழுவதும் தண்ணிர் வசதி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். போதுமான நிதி வசதி இல்லாத காரணத்தினால் இந்ததிட்டம் கி.பி. 1780-ல் கைவிடப்பட்டது.[2] நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த திட்டத்தை கும்பெனியார் நிறைவேற்றினர். அதற்குப் பெரியாறு திட்டம் என பெயரிடப்பட்டது. தற்பொழுதைய மதுரை மாவட்டம் மட்டும் அந்தத் திட்டத்தினால் பயனடைந்து வருகிறது.


  1. Itnlnram Row, T., Ramnad Manual (1881) page
  2. Madura Dt. Records Vol. 1152. pp. 12, 16.