197
ஜேன் அயர் வீட்டிலிருந்தால், தன் பிள்ளைகள் கெட்டு விடும் என்றுதான் இங்கே என்னிடம் ஒப்படைத்தாள். ஆனால் வஞ்சக மில்லாமல், இந்த நிலையத்துப் பெண்கள் கெட்டு விடக் கூடாதே என்ற தன் கவலையையும் என்னிடம் தெரிவித்து எச்சரிக்கை செய்தார். ஆகவே, அனைவரும் இப்பெண் வகையில் விழிப்பாயிருங்கள்.' என்று திரு.பிராக்கிள் ஹர்ஸ்ட் கூறி முடித்தார்.
என் உடலின் எண்சாணும் ஒரு சாணாகக் குன்றிப் போயிற்று. புதிய இடத்தில் வாழ்க்கை தொடங்கும் போதே எல்லார் உள்ளத்திலும் என் மீது கசப்பு உண்டு பண்ணப் பட்டது. என் அத்தையின் கொடுமையினும் இந்தக் கோர மனிதன் கொடுமை எத்தனையோ மடங்கு பெரிது என்று எண்ணி வருந்தினேன்.
செல்வி டெம்பிள் என்னை நாற்காலியிலிருந்து இறக்கி விட்டாள். பிராக்கிள் ஹர்ஸ்ட் செல்வியர் இருவரும் என்னைப் பார்க்க விரும்பாதவர்கள் போல முகத்தை மறைத்துக் கொண்டு, “ஆகா! என்ன கூழைப் பேயா இது? என்று என்னை ஏளனமாகப் பேசினர்.
அன்றிரவு எனக்கு உணவு செல்லவில்லை. திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட்டின் கட்டளையினால் யாரும் என்னண்டை வரவில்லை. நானும் யாரையும் பார்க்கத் துணியவில்லை.
அன்றிரவெல்லாம் என் கண்கள் துயிலை வெறுத்தன. என் தலையணை முழுதும் கண்ணீரால் நனைந்தது. “என்னை அறியுமுன்பே எல்லாரும் என்னைக் கெட்டவள் என்று ஒதுக்கிவிட்டனர். நான் இனி என்ன செய்தாலும் செய்யா விட்டாலும் கெட்டவளாகத் தானே வாழ வேண்டும்? இப்படி வாழ்வதை விட இறந்துவிட்டால் எவ்வளவோ நலமா யிருக்குமே,” என்று பலவும் எண்ணிக் கொண்டிருந்து இறுதியில் அயர்ந்தேன்.
காலையில் பெண்களனைவரும் எழுந்து சென்று விட்டனர். துயில் கூடத்தின் ஒரு மூலையிலிருந்து நான் மீண்டும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் என் தோழி ஹெலன் பர்னஸ் என் வகையில் ஏற்பட்டிருந்த தடையுத்தரவைக்