உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




214||

அப்பாத்துரையம் - 7

இவற்றை வெறுக்கவில்லை. மாறாக, என்னிடம் அவர் நம்பிக்கை வளர்ந்தது. அவர் எதிலும் என் அறிவுரையைக் கோரிவந்தார். அடிக்கடி அடேலின் முன்னேற்றம் பற்றியும் வீட்டுக்காரியங் களைப்பற்றியும் நாங்கள் கலந்து பேசித் திட்டமிட்டு வந்தோம்.

ஆனால், அவர் வாழ்வின் மிக முக்கியமான ஒரு செய்தியைப் பற்றி மட்டும் அவர் என்றும் குறிப்பிடவே இல்லை. நானும் அதுபற்றிப் பேசவில்லை. அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்ற செய்தி மெள்ள வீட்டில் எங்கும் அடிப்பட்டது. திருமதி ஃவேர்ஃவக்ஸ் இதுபற்றி மிகுந்த அக்கறையும் கவலையும் காட்டினாள். பக்கத்திலுள்ள ஒரு குடுப்பத்தினுடன் அவர் அடிக்கடி ஊடாடி வந்தார். அக்குடும்பத்தைச் சேர்ந்த செல்வி பிளான்சிதான் இதற்கு மூலக்காரணம் என்று திருமதி ஃவேர்ஃவஸும் பிறரும் கருதினர். அவர் எப்போது திருமணம் செய்து கொள்வார்? செய்து கொண்டால் தார்ன்ஹில் இல்லத்திலேயே தங்குவாரா? நகருக்குச் சென்றுவிடுவாரா?” என்பது பற்றியே எல்லாரும் கவலைக் கொண்டனர். ஏனெனில், அவர் வேறிடம் சென்று விட்டால், தார்ன்ஹில் இல்லம் புறக்கணிக்கப்படும். அதை ஒட்டி வாழ்ந்த அனைவர் வாழ்விலும் பொலிவு குன்றிவிடும்.

எனக்கும் இதுபற்றிய கவலைகள் இல்லாமலில்லை. உண்மையில் எவரையும்விட எனக்குத்தான் கவலை மிகுதி. திரு.ராச்செஸ்டர் மணம் செய்து கொண்டு நகரம் சென்றாலும் சரி, செல்லாவிட்டாலும் சரி, நான் என் வேலையை விடவேண்டி வருவது உறுதி. புதிய வீட்டுத் தலைவியின் கீழ் நான் நீடித்து ருக்க முடியாது. அது செல்வி பிளான்சியாயிருந்தால், நானே இருக்க விரும்பமாட்டேன். இதுவரை சரிசம நிலையில் எல்லாருடனும் நான் பழகிவிட்டேன். நய நாகரிகமுடைய செல்வி பிளான்சி எல்லாப் பணியாளர்களையும், பணியாளர்களாகவும், என்னைப் பணியாளர்களைவிடச் சற்று உயர்வாகவுமே நடத்துவாள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

இத்தனை கவலைகளையும் நான் காட்டிக்கொள்ளாமல் அடக்கியே வந்தேன். ஆயினும் திரு. ராச்செஸ்டர் இவற்றை ஓரளவு உய்த்தறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் என் எழுத்துத் திறமை, ஓவியம், இசைப்பயிற்சி ஆகியவற்றிலெல்லாம்