பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

25


பிரதானி தாண்டவராயபிள்ளை அப்பொழுது சிவகெங்கைச் சீமைக்கும், தொண்டைமான் சீமைக்கும் இடையில் உள்ள பாய்குடி என்ற காட்டில் தென்னந்தோப்பு ஒன்றில் தங்கியிருந்தார். நவாப்பின் நிர்வாகத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்தி வந்ததுடன், மறைந்த சிவகங்கை மன்னரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சிவகெங்கைக்கு மன்னராக நியமித்து மறவர் சீமையில் ஆட்சியை நிலை நாட்ட பாடுபட்டு வந்தார். ஆங்காங்கு உள்ள நாட்டாண்மைகளுக்கெல்லாம் ஒலைகள் அனுப்பி வைத்தார். '. .தஞ்சாவூராரும், தொண்டைமானும் சேர்ந்து தமக்கு படையும், பொருளும் வழங்க சம்மதித்து இருக்கின்றனர். ஹைதர் அலி நாயக்கரது படை அணிகளும் இங்கு வர இருக்கின்றன. ஆதலால உங்களால் இயன்ற அளவு எல்லா வீரர்களையும், படைக்கலங்களையும் சேகரித்துக்கொண்டு நம்மிடம் வாருங்கள். எல்லோரும் இணைந்து இராமனாதபுரம், சிவகெங்கையைக் கைப்பற்றி விடலாம்' எனக் குறிப்பிட்டிருந்த ஒலை ஒன்றை தொண்டி அமுல்தார் கைப்பற்றிய பொழுதுதான் தாண்டவராய பிள்ளையினுடைய நடவடிக்கைகள் கும்பெனியாருக்குப் புலனாயிற்று. இதனை அந்த அமுல்தார் நவாப்பிற்குத் தெரிவித்துக் கடிதம் எழுதினார். [1]

இவையனைத்தும் மறவர் சீமையில், மக்களது கிளர்ச்சி தீவிரமடைந்ததற்கான அறிகுறிகளாகத் தென்பட்டன. பீதியடைந்த நவாப்பின் பணியாளர்கள் மிகவும் பாதுகாப்பான இடங்களில் மட்டும் இருந்து கொண்டு தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.[2] சிவகங்கைப் பகுதியின் நிலைமை இவ்விதம் இருக்க, இராமனாதபுரம் பகுதியில், ஆறுமுகம் கோட்டை மாப்பிள்ளைத் தேவர் தமது எண்ணங்கள் நிறைவேற மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக எண்ணிச் செயல்பட்டார். இராமநாதபுரம் சீமையில், வடக்கு மேற்குப் பகுதியிலுள்ள குடிமக்களைத் திரட்டி, நவாப்பின் ஆட்சியை மறவர் சீமையினின்று அகற்றுவதற்கு போர்க்கொடி உயர்த்தினார். இராமநாத


  1. м, с. с. . Vol. 2 1, 12-12-1772, р. 263.
  2. м. С. С., Vol. 21, 2-10-1772, p. 236. : М. С. С. , Vol. 43, 1-12—1772, p. 1033.
  • நாயக் என்ற பாரசீக மொழிச்சொல்லின் திரிபு.