உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

||-

அப்பாத்துரையம் - 19

கு

தமிழன் தொழிலில் முன்னேறியபோது உற்றுக் கவனித்துப் பயன்படுத்திய பொருள்களில் ஒன்று தேன். கனிச்சாற்றுடன் போட்டியிடும் அதன் இனிமையை அவன் கண்டு வியந்தான். கனிச்சாறு கெடும். தேன் கெடாது. தேனிலூறிய கனியும் உப்பில் ஊறிய காய் போல் கெடுவதில்லை. புளிக்காடியிலும் இப்பண்பு உண்டு. தமிழன் இவற்றின் பண்பைக் கனிகளுக்கு ஊட்டி, பழங்களுக்கு ஊட்டித் தேம்பழங்கள் உண்டு பண்ணினான். வெட்டிவைத்தாலும், ஈ எறும்பு மொய்த்தாலும் கெடாத பழங்கள் அவை. இவற்றையே தமிழன் தேமா, தேங்கதலி, தேம்பலா என்றான். இன்றும் இவை தமிழகத்தில் உண்டு. ஆனால், தமிழ்ப் பண்பின் உயர்வேபோலத் தமிழனும் முற்றிலும் அறியாது, உலகமும் ஒரு சிறிதும் காணாமல், அது தமிழகத்தில் மட்டும் காட்டுப் பயிராக மேற்குமலைத் தொடர்க்கு அருகில், குமரி முனையின் அருகில் குமுறிக் கிடக்கின்றன. அவற்றின் பண்பறிந்து மீட்டும் உலகுக்களிக்கப் புத்தார்வத் தமிழர் இனித்தான் முன் வருதல் வேண்டும்!

தமிழர் இன்று தமிழகத்தில் மட்டுமின்றி, தென்னுல கெங்கும் பரந்துள்ளனர். அவர்கள் இன்று ஆள்பவராக இல்லை. ஆனால், இன்னும் ஆக்குபவராக, பயிர் வளம், தொழில் வளம், வாணிக வளம் வளர்ப்பவராகவே உள்ளனர். தென்னுலகிலிருந்து கீழுலகிலிருந்து மீட்டும் 'சமனொளி' பரப்பும் கடப்பாடுடையவர் அவர்களே. உலக நடுவிடமான இலங்கையின் உச்சிமலைக்குத் தமிழர் ‘சமனொளி' என்று இதனாலேயே பெயர் கொடுத்தனர்

என்னலாம்.