உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

101

சிறப்பாக; வடபுலத்திலும் ஜயதேயர், சைதன்னியர் குறிப்பாக வ்வகைக் கடவுட் காதல், காதல் கடவுள் தத்துவத்தில் இழைந்தவர் ஆவர். உலகில் பரவிய இக்கோட்பாட்டைத் தமிழர் பண்பில் பொதுவாகவும் வள்ளுவப் பண்பில் சிறப்பாகவும் இன்னும் பலவகையில் காணலாம்.

குடும்ப இன்பத்தின் நிலைக்களனும் கடவுட் பற்றின் நிலைக்களனும் தமிழில் ஒருங்கே வீடு என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. இடைக்காலத் தமிழ் இலக்கண இலக்கிய ஆராய்ச்சிப் புலவர் இதற்குப் பொருள் கூறுவதிலே இடைக்கால மாயைக்கு ஆளாகின்றனர். கடவுட் பற்று நிலையில் துறக்க வீட்டுக்கு மட்டும் விடுபட்டது வீடு, பற்றுக்களிலிருந்து விலகிய இடம் என்று பொருள் தருகின்றனர். ஆனால், குடும்ப வீட்டுக்குத் துன்பம் விட்டஇடம் வீடு என்று வேறு பொருள் காண்கின்றனர். உண்மையில் இரண்டுமே துன்பம் விட்ட இடம் என்ற பாருளுக்குத் தகுதியுடையவையே. அது மட்டுமன்று. இரண்டுக்கும் உரிய பகுதியை வள்ளுவர் சுட்டுகிறார். அது வீழ்தல், வீழ் தருதல் என்ற பண்டைத் தமிழ்ச் சொல்லாகும். மேலீடாகக் காதலில் வீழ்தல் (Fall in love) என்ற ஆங்கில மரபை நினைவூட்டுவதாக இச்சொல் அமைகிறது. ஏனெனில், காதலித்தல் என்பதே அதன் குறிப்பு. ஆனால், அதன் மெய்ப் பொருள் விழுது அல்லது வீழ்து என்பதனுடன் தொடர்புடையது. வீழ்தருதல் என்பது விழுதுபோல் வேர் ஊன்றி விரிந்து பரவப் பெறுதல் என்ற கருத்து உடையது. அதற்கு நிலைக்களமானது வீடு. அது தாய் ஆலமரம்போல் வீட்டில் தொடங்கி, வீட்டின் விரிவாகிய ஊர், நாடு, இனம், மொழிஇனம், பண்பினம், மனித உலகு எனப் படராலமரம் போல விரிவுற்றுப் பரவிச் செல்வது ஆகும்.

காதல், பக்தி ஆகியவற்றில் தமிழர் கொண்ட ஒற்றுமை இத்துடன் முடியவில்லை. காதலன் நிலை பக்தன் நிலை போன்றது. காதலி நிலை கடவுள் நிலை போன்றது. கடவுளுக்குரிய சொல்லாகிய 'தலைவன்’ ‘தலைவி' தமிழ் மரபில் மட்டுமே காதலர்க்கும் கடவுளுக்கும் ஒருங்கே வழங்குதல் காணலாம். ஆனால், இங்கும் சமயவாணர் பலர் மறந்து மரபு அறும்படிவிட்ட செய்தி ஒன்று உண்டு. பக்தன் கடவுளுடன்

ன்