உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8


தக்கது. இவ்வேதுபற்றித் திருவெள்ளறையில் பெருங்கிணறு தோண்டுவித்த கம்பன் அரையன் என்னும் தலைவனே தன் ஊராகிய ஆலம்பாக்கத்திலும் மாற்பிடுகு ஏரியை வெட்டுவித்திருத்தல் கூடும் என்றும் எண்ணலாம். மாற்பிடுகு ஏரியை வெட்டுவித்தவன் இவனது தமயனாகிய ஆலம்பாக்கம் விசைய நல்லூழானாக இருத்தல் வேண்டும் என்று கூறினும் பொருந்தும். இவ்வூர்க்குத் தந்திவர்மமங்கலம் என்னும் ஒரு பெயரிருந்திருப்பதை நோக்குங்கால் கி.பி. 780 முதல் 830 முடிய ஆட்சிபுரிந்த தந்திவர்மன் என்ற பல்லவ மன்னனால் உடன் பிறப்பினராகிய இவ்விருவர்க்கும் இது முற்றூட்டாக அளிக்கப் பட்டிருத்தல் வேண்டும் என்று அறியப்படுகின்றது.

இனித் திருவெள்ளறையில் தோண்டுவிக்கப்பெற்ற கிணற்றின் பெயர் ஆராய்தற்குரிய தொன்றாம். கல்வெட்டில் அதன் பெயர் ‘மாற்பிடுகு பெருங்கிணறு என்பது' என்றிருத்தலால் நாகரிகம் மிகுந்துள்ளதாகக் கருதப்படும் இந்நாளில் ஆற்றின் பாலங்களுக்கும் பிற கட்டிடங்களுக்கும் பெயரிட்டு வழங்குவது போல அந்நாளிலும் அத்தகைய வழக்கம் இருந்து வந்தது என்பது நன்கறியக் கிடக்கின்றது. மாற்பிடுகு என்பது ஒரு சிறந்த பட்டம் என்று புலப்படுகின்றது. மால்+பிடுகு என்ற இத்தொடர் மொழியின் பொருள் பேரிடி என்பதேயாம். இப்பட்டத்தையும் விடேல் விடுகு, பாகப் பிடுகு, பெரும்பிடுகு என்ற பட்டங் களையும் பெற்று வாழ்ந்த சில முத்தரையர்களின் கல்வெட்டுக்கள், செந்தலை, திருச்செந்துறை, திருமெய்யம், மலைக்கோயில் முதலான ஊர்களில் உள்ளன. இன்னோர், பல்லவ மன்னர்கட்குத் திறை செலுத்திவந்த குறுநில மன்னர் ஆவர். எனவே, இப்பட்டங்கள் பல்லவ ப்பட்டங்கள் பல்லவ மன்னர்களால் இவர்களுக்கு வழங்கப் பட்டிருத்தல் வேண்டும், செங்கற்கபட்டு ஜில்லா வல்லங்குகைக் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு, பல்லவ வேந்தனாகிய முதல் மகேந்திர வர்மன் பகாப்பிடுகு என்னும் பட்டம் உடையவனா யிருந்தனன் என்று உணர்த்துகின்றது. சைவசமயாசாரியருள் ஒருவராகிய திருநாவுக்கரச அடிகளைத் துன்புறுத்தியவன் இவ்வேந்தனேயாவன். இவனது பேரனுடைய புதல்வனான முதல் பரமேச்சுரவர்மன் பெரும்பிடுகு என்ற