உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

133

யாரென்பது அவள் வேலையாட்களுக்கே தெரியவில்லை. வேலியிலுள்ள ஒரு துளை வழியாக நான் ஒன்றிரண்டு தடவை எட்டிப் பார்த்தேன். அங்கே சில இளம் பெண்கள் உலவுவது கண்டேன். ஆனால் அவர்கள் தம் பாவாடை நுனிகளைக் கையில் சுருட்டி எடுத்துக் கொண்டு சென்ற முறையிலிருந்து. அவர்கள் பணிப்பெண்கள் மட்டுமே என்று உணர்ந்தேன். நேற்றுக் கதிரவன் மறைவுக்குச் சிறிது நேரம் கழித்து ஒரு சீமாட்டி கடிதம் எழுதிக் கொண்டிருப்பது கண்டேன். அவள் முகம் அமைதியாயிருந்தது. ஆனால் அது முற்றிலும் துயரம் குடி கொண்டிருப்பதாகத் தோற்றிற்று. அவள் பாங்கியருள் சிலர் மறைவாகக் கண்ணீர் வடித்துக்கொண்டே நின்றனர்'.

இவற்றைக் கேட்டபின் கெஞ்சிக்கு மேலும் அறிய வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது.

தன் தலைவரான கெஞ்சி உயர் பதவி உடையவர், பெரும் பொறுப்புகள் உடையவர் என்பதைக் கோரெமிட்சு அறிவான். ஆயினும், அவர் இளமை, மக்கள் அவரிடம் காட்டிய நேசம் ஆகியவற்றுக்கு அவர் வாழ்வில் ஓர் இடம் உண்டு; ஒரு சில

ளமை விளையாட்டுகளில் அவர் ஈடுபடவில்லையானால், அவர் கடமைகளில் ஓரளவு தவறியவராகவே கருதப்படுவார் என்று கோரெமிட்சு கருதினான், சாதாரண மக்களிடம் கனவிலும் மன்னிக்க முடியாத செயல்களைச் கெஞ்சியிடம் அவர்கள் இயல்பானவையாகவும், சரியானவையாகவும் கொள்வர் என்பதில் அவனுக்கு ஐயமில்லை.

இவ்வெண்ணங்களுடன் அவன் பின்னும் கெஞ்சியை நெருங்கி மெல்லப் பேசினான். 'மேலும் சில தகவல்கள் அறிய எண்ணி நான் அவளுடன் தொடர்பு கொள்ள ஒரு சாக்குப் போக்குக் கண்டேன். அதன் பின் அதற்கு மறுமொழியாகப் பண்பட்ட கையெழுத்துடன் நாகரிக வாசகங்களடங்கிய ஒரு கடிதம் பெற்றேன். அவள் நல்ல நிலையிலுள்ள அணங்காகவே இருக்க வேண்டும்' என்றான்.

'நீ இன்னும் விளக்கமான தகவல்கள் அறிய வேண்டும். அவளைப் பற்றி எல்லாச் செய்திகளும் அறியும் வரை நான் மன அமைதி பெற முடியாது' என்று கெஞ்சி அவனிடம் பேசினான்.