உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

157

என்று அவளைக் கடிந்த வண்ணம் அவன் அறைக்குள்ளிருந்தே கைதட்டிக் கூப்பிட்டான். தனிமை நிழல் சூழ்ந்த அந்த வெற்றுமனை ஒலியை நாற்புறமிருந்தும் எதிரொலித்துக் கேலி செய்தது. எவரும் அதனிடையே எதுவும் கேட்க முடியவில்லை. இதற்கிடையில் அணங்கு கால் முதல் தலைவரை நடுங்கத் தொடங்குவதை அவன் உற்று நோக்கி மேலும் குழம்பினான். 'இப்போது என்ன செய்வது?' - ஒன்றும் முடிவு செய்யாமல் அவன் தத்தளித்தான். அதற்கிடையே திடுமென அணங்கின் உடல் முழுதும் விறைத்து வியர்வை கொட்டிற்று. அவள் உணர்வே இழந்து வருவதாகத் தோற்றிற்று.

'ஒரேயடியாக அஞ்ச வேண்டாம், ஐயனே!' வாழ்நாள் முழுவதுமே என் தலைவி இது போன்ற பயங்கரக் கனவுகளாலும் அவற்றின் பயனான வலிப்பு நோயாலும் அவதியுற்று வருகிறாள்' என்றாள் பணி மாது. காலையில் அவள் எவ்வளவு கலைப்புற்றிருந்தா ளென்பதையும். வேதனை தாங்க மாட்டாதவள் போலக் கண்கள் மேல் நோக்கிப் பார்த்த வண்ணம் படுத்திருந்தாளென்பதையும் அவன் இப்போதே நினைத்துப் பார்த்தான். கை கொட்டிக் கொட்டி எதிரொலி களையே கேட்டு அலுத்துவிட்டது. 'இப்போது நானே போய் யாரையாவது எழுப்பி வருகிறேன். வரும் வரை நீ இவளை விட்டகலாதே!' என்று கூறிவிட்டு அவன் அகன்றான்.உகானைப் படுக்கையருகில் கொண்டு வந்துவிட்டு, மேற்குத் தலைவாசலின் திசையில் நடந்தான்.

மேற்கு வாயில் கடந்ததும் பக்கத்துச் சிறையிலும் விளக்கு அணைந்திருப்பது கண்டான். அது மட்டுமன்று; புதிதாக ஓர் ஊதைக் காற்றே எழுந்து உலவிற்று.

அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த ஏவலர் மிகச் சிலர். அந்தச் சிலரும் அதற்குள் உறங்கிவிட்டார்கள். தன்னிடம் மெய்க்காவலனாயிருந்த மனைக் காவலன், சிறுவனும் மட்டுமே அங்கே இருந்தார்கள். அவன் கூப்பிட்டவுடன் அவர்கள் திடுமென்று எழுந்து நின்று அவனுக்கு மறுமொழி கூறினார்கள். 'ஒரு விளக்குக் கொண்டுவா. அத்துடன் உன் வில்லைக் கொண்டு வந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு உரத்து இடை டைவிடாது குணத்தொனி செய்து கொண்டிருக்கச் செய். இத்தகைய