உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

91

அஸஃவ்: நீ முதல்தர அரசியல்வாதி, மேஹர். உன் கையில் பேரரசு சிக்கிவிட்டது. அதில் புயல் எழும்; பூகம்பம் எழும். இது உறுதி.

(போகிறான்.)

காட்சி 14

(அரண்மனை மண்டபம்; மணவிழாக்கோலம். அரசவைச் செல்வர், ஆடல் மங்கையர்.)

1-ம் அ.செ: ஆடு, பாடு, இரவும் பகலும் ஆடுங்கள், பாடுங்கள். இன்றைய விருந்து இனி என்றும் கிடையாது.

2-ம் அ.செ: மணமகள் அழகு போலவும் எந்த அழகும் கிடையாது.பேரரசர் அவளுக்கு நூர்ஜஹான், உலகின் ஒளி என்ற சிறப்புப் பெயர் சூட்டியுள்ளாராம்.

3-ம் அ.செ: ஆம். இத்தகைய திருமணத்தில் விருந்தயராமல் பின் எப்போது அயரப் போகிறோம்? ஆடு, பாடு, விருந்தாடு. அனைவரும்: சரி பாடுவோம்.

புதுமை, புதுமை

புதிய விருந்தின் அருமை! (புதுமை)

பொன்னொடு வெள்ளி பூவொடு விதானம்

அமையுங்கள்

இன்னிசை யியம்ப இனிய சிற்றுண்டி (புதுமை)

சமையுங்கள்

மாதரும் மைந்தரும் மகிழ் நறவாடிக்

களியுங்கள்

மன்னன் ஜெஹாங்கீர் மங்கை நூர்ஜஹான் புகழ் (புதுமை) குளியுங்கள்

காட்சி 15

(அரசவைச் செல்வர் செல்கின்றனர்.)

(நூர்ஜஹாவின் புதிய மாளிகை. நூர்ஜஹானும் ஜெஹாங்கீரும் உரையாடுகின்றனர்.)