பிறமொழி இலக்கிய விருந்து -2
இருந்தான்.
வேலியின்
மறுபுறம்
107
எதிர்பாராவகையில் டெரூசெட்டும் வந்தாள். இருவரும் எதிர்பாராவகையில் காட்ரேவும் அங்கே வந்தான். அவன் உறவினர் ஒருவர் இறந்து அவனுக்குத் திடுமெனப் பெருஞ்செல்வம் உரியதாயிற்று. மறுநாளே அவன் காஷ்மீரில் பயணமாகச் செல்லவேண்டும். இதைக் கூறி டெரூசெட்டிடம் விடை பெறவே அவன்
எண்ணினான்.
ஆனால் இறுதி விடைபெறும் சமயமாதலால் தன் உள்ளக் காதலை அவன் அவளிடம் கொட்டினான். அவளும் தன் உள்ளம் அவனிடமே ஈடுபட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள். காதலரிருவரும் ஒருவருடன் ஒருவர் மாறா உறுதி கூறிக் காதலில் ணைந்தனர். லெத்தியரி மணியடித்ததைக்கூட அவர்கள்
கவனிக்கவில்லை.
கில்லியட்டின் உள்ளம் உடைவுற்றது. அவன் காதல் தெய்வம் அவளை அசட்டைசெய்து வேறிடத்தில் உள்ளம் பறிகொடுத்தது. அவன் அவள்மீது சினம் கொள்ளவில்லை. அவன் வாழ்வின் ஆர்வம் முழுதும், அவன் தியாகம் முழுவதும் கசப்பாக மாறிற்று. ஆயினும் கசப்பிலும் காதல் அவன் உள்ளப்பண்பை உயர்த்திற்று. அவன் காதலர் நலனில் அக்கரை கொண்டு வெளியேறினான்.
லெத்தியரி கில்லியட்டை ஆரத் தழுவிக்கொண்டான். செய்தியாவும் கேட்டான். குளூபினின் மாயமுடிவுபற்றிய கதை கேட்டபின் அவன் மகிழ்ச்சி கரைகடந்தது. அந்நிலையில் அவன் "ஆகா, நான் விரும்பிக் காத்துக் கிடந்த என் மருமகன் நீயே. டெரூசெட் இனி உன் மனைவி. புதிய டியூராண்டுக்கும் நீயே மீகாமன்” என்றான்.
அவன் பயணக் கோலத்திலிருந்தான். ஆடைமாற்றவில்லை. அதையும் பாராமல் அவன் டெரூசெட்டை அழைத்து அவளிடம் "இதோ உன் கணவன். நாளை உன் திருமணத்திற்குத் தயாராயிரு" என்று ஆணை யிட்டான்.
காட்ரே அருகிலேயே நின்றான்.
""
காதலர் உள்ளத் துடிப்பை லெத்தியரி அறியவில்லை. ஆனால் கில்லியட் அறிந்தான். தன் காதல் தெய்வம்