உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

117

சில சமயம் கடலிடையே ஒரு சிறு நகரம் ஊர்வது போலத் துறை முகத்தை நோக்கிக் கப்பல்கள் ஊர்ந்து வரும். கப்பலின் பக்கங்களை அலைகள் மோதித் தழுவி விளையாடும். துறைமுகத்தை அணுகும்போது நிலத்தை வரவேற்கும் மகிழ்ச்சிக் கீதம் கப்பலில் எழும். மக்கள் முகங்களில் களிப்புத் தாண்டவமாடும். இக்காட்சிகளை வா. கை. 65 கண்குளிர, கண்நிறையக் காண விரும்பினான். ஆனால் அவன் காண அவாவிய அந்தக் கப்பலின் மனிதர்கள் கண்களில் அவனோ அவன் தோழர்களோ, சிறைக்கூடமோ பட்டவுடன் அவர்கள் இன்ப முகத்தில் சட்டென ஒரு மாறுபாடு ஏற்படுவதையும், சிறையின் காட்சியும் நினைவும் மாறிய பின்பே அவர்கள் முன் நிலையடைவதையும் அவன் கண்டான். அந்தோ! அவன் காண விரும்பிய இன்பங்கள் கூட அவன் கண் பட்டவுடன் துன்பமாகுமளவு அவன் துன்பத்தின் சின்னம் ஆயிருந்தான். இவ் எண்ணம் அவனைச் சுட்டுக் கருக்கிற்று.

கப்பல் போனபின் அவன் அக்கப்பலையும், அதிலிருந்த மனிதர்களையும் அவர்களை வரவேற்கும் வெளியுலகத்தையும் வாயார வைதான்-மனமாரப் பழித்தான்! உலகம் ஆண்டு தோறும் அவனை வெறுத்தது. ஆண்டுதோறும் அவனும் உலகத்தைக் கண்டு சீறிப் புகைந்தான்.

அவன் வெளியுலகத்தைப் பழித்ததுடன் அமையவில்லை. அடிக்கடி அவனும் மற்றக் கைதிகளும் ஒருவரை ஒருவர் பழித்தனர்.

வெளியுலகில்

துன்பம் மக்களை

சிறையுலகில் அது மக்களைப் பிரிக்கிறது.

ணைக்கிறது.

அவனைக் காணாமல் அவன் மட்டும் காணும் புங்கமரமும், அலை களும், படகுகளும் இல்லாவிட்டால், அவன் மனக் கசப்பு ரே இடையறா மனக்கசப்பின் சின்னமாகியிருக்கும்.

தொடக்கத்தில் சிறை வாழ்வு கடுமையாயிருந்தது.ஆனால் அக்கடுமையில் கைதிகள் மரத்துப் போய் இருந்தனர். மரங்களுக்கு இருக்கும் உயிரீரம்கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் உடைக்கும் கல்லுடன் அவர்களும் கற்களாய் இருந்தனர். ஆனால் திடுமென சிறை வாழ்வின் உள்வெப்பை எடுத்துக்காட்டுவது