உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

119

மற்றொருவன் "ஒளிந்து திருடுகிற நம்மை விடுவித்துப் பட்டப் பகலில் கொள்ளையடிப்பவர்களையல்லவா அடைத்து வைக்க வேண்டும்?" என்றான்.

"உண்மையான குற்றவாளிகள் உள்ளேயுமில்லை, வெளியே யுமில்லை. நம்மை அடைத்து வைத்துத் தொல்லைபடுத்துகிற இந்தக் காவலாளிகளை விடக் கொடியவர்கள் கிடையாது. அவர்களை அடைத்து வைத்துத் தண்டிக்க வேண்டும். நாம் காவலாளிகளாயிருந்து அவர்கள் பழியை அவர்களிடமே காட்டவேண்டும்” என்றான் மற்றொருவன்.

வா.கை. 65 ஒன்றும் பேசவில்லை. அவனுக்கு யார் மீதும் கோபமில்லை. பழி வாங்கும் உணர்ச்சியுமில்லை. அவன் சிறையைத் துன்பமென்று கூட எண்ணவில்லை. நாடிய இன்பத்திலிருந்து அது தன்னை அடைத்து வைக்கிறது என்று மட்டும் எண்ணினான்.

விடுமுறை ஓய்வு நாள் மாலையில் அவன் குன்றின் மீது உலவினான். அங்கே மலர்ச் சோலையாக இல்லாவிட்டாலும் பச்சைத் தழையாக ஏதேனும் இருந்தால்கூட அவன் வெம்பிய உள்ளத்துக்கு ஆறுதலாக இருக்கும். ஆனால் குன்று ஒரு வற்றல் பாறையாகத்தான் இருந்தது. அவன் தழை லைகளைப்பற்றி உள்ளத்தில் கனவு கண்டுகொண்டே கடற்கரையடுத்து உலவினான்.மலை தராத வளத்தை அலைகள் தந்தன. ஒரு பச்சை யிளங்கொப்பு இலையும் தழையுமாய் மிதந்து கரையில் ஒதுங்கிற்று. அவன் அதைப் பாறையில் கொண்டுசென்று நட்டுவைத்தான். மாலை வெயிலில் அதன் நிழல் நீண்டு படர்ந்தது. அதில் அவன் படுத்துக் கனவு கண்டான். பச்சையிலையின் மணம் அவன் மூச்சுடன் மூச்சாக உடலில் உலவிற்று. காற்றில் அது அலையும் ஓசை அவன் செவியின் வழி உள்ளத்தில் சென்று பாட்டாய் இசைத்தது.

பாறை! பாறை! பாறை; உள்ளங் கொள்ளா

வற்றற் பாலை!!

சேறு! சேறு! சேறு!

அருவருப் பூட்டும்