உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

121

எறியப்பட்ட கிழிசல் கந்தல் கூளங்கள், ஊர்ச் சாக்கடைச் சேறு, நீரில் விழுந்திறந்த நாய், பூனை, எலிகளின் பலபடி மாறுபட்ட தோல் தசைகள்- இங்ஙனம் நகரின் அழுகல் பொருட்காட்சி சாலையாகக் குளத்தின் வண்டல் விளங்கிற்று.

சேறுகளை வண்டிகளில் நிரப்பினர். இதை எதற்கு, எங்கே காண்டு போகின்றனர் என்று கைதிகள் வியப்புற்றனர். அவை யாவும் அவர்கள் சிறைக்கூடத்துக்கு வெளியிலுள்ள வற்றற் பாறையிலேயே கொட்டப்பட்டது.

ஊர் திருந்துவதற்காகத் தங்களை உழைக்கவைத்து, அதன் அழுக்கைத் தங்கள்மீதே எறிகிறது இந்த நன்றி நேர்மைகெட்ட அரசியல் என்று பல கைதிகள் முணுமுணுத்தனர்.

வர வர ஊரில் அழுக்கு அகன்றது.

சிறையின் வற்றற்பாறை மலை சேறுமலையாயிற்று.

நம் சிறையை நரகமாக்குகின்றனர் என்றனர் கைதிகள். ஆனால் வா. கை. 65-க்குப் பசுங் கொம்பின் நிழலிலிருந்து தான் கேட்ட பாடல் நினைவுக்கு வந்தது.

பாறை! பாறை! பாறை;

உள்ளங் கொள்ளா

வற்றற் பாலை!!

சேறு! சேறு! சேறு!

அருவருப் பூட்டும்

முடைநாறும் அளறு!!

இவையே நாளை

சோலை! சோலை! சோலை!

பசுந்தழை, பொன்மலர்

இன்கனிப் பொழிலே!!

ஆம். பாறை, பாறை, பாறை! அது இப்போது சேறு, சேறு, சேறு ஆகிவிட்டது. ஆனால் இது தீமையை இரட்டிக்கவல்லவோ செய்தது? முன் நல்ல காட்சியில்லை. நல்ல காற்றிருந்தது.

ப்போது நல்ல காட்சியுமில்லை. நல்ல காற்றுமில்லை. முன்னில்லாத அருவருப்பான தோற்றமும் முன் இல்லாத