(214
அப்பாத்துரையம் - 24
கவிதையை அவன் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். அஸோஜிரோ ஆனந்தக் கடலில் தன் கவிதைக் கலத்தை மிதக்கவிட்டான். அவன் நண்பன் அது கேட்டு மகிழ்ந்தான்.
தனிப்பாடல் வரைந்த தாள்நறுக்கை ஜப்பானியர் தன்சாக்கு என்று கூறுவார்கள். தன்சாக்கு இயற்றுவதில் அஸோஜிரோவுக்கு இணை அஸோஜிரோவே. அத்தகைய ஒரு தன்சாக்கு இப்போது துறவியின் கையிலிருந்தது, பால முகப்பிலிருந்து ஆற்றுக் காட்சிகளைக் கண்டு அனுபவித்த ஒருவன் பாடுவதாக அது அமைந்திருந்தது. அதைத் துறவி இப்போது உரத்த குரலிலே பாடினான்.
“விழாவார்ந்த மக்கள் அணிசாயும்
இந்தநற் பாலத்திலே
அழகார்ந்த பால வளைவு கடந்து பரந்த வெள்ளம்
இழையோடி யாடும் அதுகண்டு தென்றல்
அயர்ந்துலவும்
நிழலார்ந்த இன்பம் இதற்கீடு வேறு நிலத்தில் உண்டோ?”
பாடி முடித்ததும் அவன், “ஆகா, எவ்வளவு அழகான பாட்டு! எத்துணை இன்பம்!" என்று தன்னை மறந்து தன் நண்பனைப் பாராட்டினான். இளந்துறவியின் துறவுள்ளத்தைக் கூடஇப்பாடலின் இனிமை சொக்க வைத்துவிட்டது.வழக்கமாக அஸோஜிரோ இயற்றும் பாடல்களை விட இது ஒரு படி சுவை மிக்கதாகவே இருந்தது.
நண்பர்கள் இருவரும் பாட்டின் மயக்கத்தில் தங்களை மறந்திருந்த சமயம் பார்த்துத் தென்றல் தன் குறும்பைக் காட்டிற்று. பாடல் வரையப் பட்டிருந்த தாள்நறுக்கு காற்றில் சுழன்று சுழன்று வளைந்து சென்றது. ஆற்றங்கரையில் ஒதுங்கி நின்றிருந்த பூம்படகில் அமர்ந்திருந்த ஒரு இளநங்கையின் முன் தென்றல் அதனைக் கொண்டு இட்டது.
பறந்து சென்ற பாட்டைப் பின்பற்றி அஸோஜிரோவின் கண்கள் படகுமீதும், படகில் அமர்ந்த அழகிய நங்கையின் மீதும்