உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

(285

வேண்டினால், உன் உள்ளத்தை ஒளி திகழச் செய். வன்மம், அழுக்காறு, மனக்கசப்பு, சோர்வு ஆகியவை உள்ளத்தில் ஒளி மழுக்கி உடலின் நலத்தையும் செவ்வியையும் உருக்குலைக்கும். யாரிடமாவது நீ தூங்கிய அல்லது வீங்கிய அல்லது ஏங்கிய முகத்தைக் கண்டால், அது அம்முகத்தின் இயல்பு என்று ஒரு போதும் கருதிவிடாதே. அது தற்செயலாக நேர்ந்தது என்றும் எண்ணவேண்டாம். எண்ணத்தின் தூக்கம், வீக்கம், ஏக்கம் ஆகியவற்றாலேயே அந்நிலை ஏற்பட்டது என்று திட்டமாக உணரலாம். முகத்தில் சுரிப்பும் சுளிப்பும் கண்டால், அவை முதுமை அல்லது துன்பத்தின் சின்னங்கள் என்று கருதவேண்டா. அவை உண்மையில், மடமை, தன்னடக்கமின்மை, இறுமாப்பு ஆகியவற்றின் அடையாளங்கள் என்று அறிக.

சிறுமிக்குரிய ஒளி திகழும் நன்முகம் உடைய தொண்ணூற் றாறு வயதுடைய மூதாட்டி ஒருவரை நான் அறிவேன். நடுத்தரவயது செல்லாமுன்பே நெரித்துச் சுரித்து அருவருக்கும் தோற்றமுடைய முகங்கொண்ட ஒருவரையும் அறிவேன்.முன்னது எப்போதும் மகிழ்ச்சி குலாவும் இனிய பண்புக்குச் சான்று; பின்னது ஆரா ஆவல். தங்குதடையற்ற உணர்ச்சிக் கொம்மாளம் ஆகியவற்றின் பழிச்சின்னம்.

வாழும் மனையின் வாழ்வுநலம் பெருக்கவேண்டுமானால், அதன் வாயில்களும் பலகணிகளும் காலதர்களும் தங்குதடையற்ற காற்றோட்டத்துக்கும் வெளிச்சத்துக்கும் வகை செய்வன வாயிருக்க வேண்டும். அதுபோலவே உயிர்வாழும் உறையுளாகிய நலமுடையதாயிருக்க வேண்டுமானால், அது மகிழ்ச்சியும் நல்லெண்ணமும் அமைதியும் தன்னூடாக உலவ விடத் தக்கதாயிருத்தல் இன்றியமையாதது.

உடல்

கருத்து எத்தனை இளமையுடையதாயிருந்தாலும் முதுமையின் கடுமூப்பு இதில் சுரிப்புக் கொண்டு வராமலா இருக்கும் என்று யாரேனும் வினவுதல் கூடும். ஆம். முதுமையின் மூப்பு எப்படியும் சுரிப்பைக் கொண்டுவரக்கூடும். ஆனால் தூய்மையான உறுதியான நல்லெண்ணம் கொண்டவரும், எல்லாரிடமும் பரந்த உள்ளன்பு கொண்டவரும் மூப்பிலடையும் சுரிப்புக்கும், மீச்செலவுணர்ச்சிகளால் காலங்கடந்துவரும் சுரிப்புக்கும் யாரே வேறுபாடறிய முடியாதவர்? முன்னது