உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

303

பல்லுலகளாவிய பேரண்டத்தை அகத்தே கண்டான். அது உலகின் புற அறிவின்முன்னும் அவனாலேயே புலப்படுத்தப் பட்டது. கறையற்ற நிறையழகும் களங்கமற்ற முழு அமைதியும் வாய்ந்த ஓர் அகஉலகைப் புனைந்துருவாக்கிக் காட்டினார் புத்தர் பெருமான்; அல்லற்படும் மனிதர் பின்தொடர, அதில் அவர் நுழைந்தார்! கனவாளர் கனவுகள் கனவாற்றலற்றவர்க்கு நனவில் எப்போதும் வழிகாட்டத் தவறவில்லை. கனவொளியால் நனவுலகை அவர்கள் ஒளியுலகாக்கி யுள்ளனர், வருகின்றனர்.

ஆக்கி

கனவார்வம் வளர்க்க; கருத்தார்வம் பேணுக. கருத்தகத்தே அடங்கி இசைக்கும் இசையை - மனத்தில் ஒளிக்கரங்களியக்காது ஒளியூட்டும் அழகொளியை - தூய கருத்துக்களின் சூழொளி வட்டமான மாயா ஓயிலை-அகச்செவிப்புலனாகக் கேட்டும், அகக்கண்ணால் கண்டும், அகத்தின் மெய்ம்மையூடு பரவப்பெற்று மகிழ்ந்தும், வாழ்வின் நிறையின்பம் நுகர்க. இவற்றிலிருந்தே நிலையான இன்பச் சூழல்கள், வானுலக வளிமண்டலங்கள் எழுகின்றன. இவற்றினிடம் உண்மையாயிருக்கப் பயிற்சி பெற்றவன் வானகத் தந்தையின் உரிமைபெற்ற செல்வனாய், அத்தந்தை படைத்த உலகத்தில் தானும் தனக்கென ஓர் உலகு படைத்தளிப்பவனாக இயங்குவான்.

மெய்யறிவுடையவர்களுக்கு

அவாவுவதென்பது

பெறுவதே! அவாஆர்வமுறுவதென்பது செயல்முற்றுவிப்பதே. மெய்யறிவர் பின்பற்றும் முறைகளைப் புல்லறிவுடைய கயவர் பின்பற்றினால்கூட, அவர்கள் புல்லறிவு நாடியநோக்கம் நிறைவேறப் பெறுமென்றால், அதே சட்ட அமைதியால் மெய்யறிவர் பெறும் வெற்றியின் தன்மை இது எனக் கூறவும் வேண்டுமா? 'வேண்டுவ வேண்டின் வேண்டிவேட்டுப் பெறுவீர்’ என்ற மறையுரை *நிறையுரை என்பதில் ஐயமில்லை.

கருத்துலகின் உச்ச உயர் கனவுகளே ஆர்க. கனவின் உயர்வே கருத்தை உயர்த்தி நனவுலகையும் செம்மைப்படுத்த உதவும். தொலை வருங்காலத்தில் உன் வாழ்வின் தாலை எதிர்நோக்குப் படம், உன்கனவு; அதுவே உன் குறிக்கோள்; நீ வருங்காலத்தில் காணும் புறக்காட்சியின் அகச்சின்னம் அதுவே.