உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் – 4

பாகஞ்செய்யும் துறையில் ஒன்றுபட்டு நில்லாது. நில்லாது போகவே அவள் செய்யுஞ் சமையல் சிறுபிள்ளைகள் செய்யும் மணற்சோற்றுக்கே ஒப்பாம். இவ்வாறு மனம் ஒருமைப்பட்டு நிற்றலின் சிறப்பை நமது உலக வாழ்க்கையின் பொதுவான நிகழ்ச்சிகளில் வைத்தே நாம் நன்கறிந்து கொள்ளலாம்.

இனி, உயர்ந்த துறைகளிற் கருத்து ஒன்றுபட்டு நிற்பதனால் விளையும் அருமை பெருமைகளிற் சிலவற்றையும் இங்கே எடுத்து உரைப்பாம். ஓவியம் எழுதுவதிற் கைதேர்ந்தவன் ஒருவன் தான் எழுதும் பொருள் வடிவங்களை எவ்வளவு நன்றாய் உறுத்து அறிகின்றானோ, அவ்வளவு நன்றாய் அவற்றை அப்படியே வரைந்து காட்டி அவற்றைப் பார்ப்பவர்க்கு மிக்க வியப்பையும் மகிழ்ச்சியையும் விளைத்திடுகின்றான். மரங்கள் ஒன்றோடொன்று சன்னல் பின்னலாய் அடர்ந்திருக்குங் காடுகளையும், பல்வகைப் பூண்டுகளால் மேல் மூடப்பட்டுப் பச்சைப்பசேல் என்று தோன்றும் மலைகளையும், அம் மலைப்பக்கங்களில் ஒருபுறம் புயல்கள் தவழ மற்றொரு புறம் ஆடுமாடுகள் மான்மரைகள் நிரைநிரையாய் மேயுங் காட்சிகளையும், அம்மலைகளிலிருந்து கீழ்வழிந்தோடி வரும் அருவிகள் கீழேயுள்ள பள்ளத்தாக்குகளில் நிறைந்து துளும்ப நாரைகளுங் கொக்குகளும் உள்ளான் குருவிகளுந் துள்ளி நீந்தும் மீன்களை நாடித்திரிதலையும், அழகிய வேட்டுவப் பெண்கள் அந்நீரில் தங்கூந்தலை அவிழ்த்து விட்டு முழுகு தலையும் நுணுக்கமாய் அறிந்து அவற்றையெல்லாம் பச்சை, நீலம், வெண்மை, சிவப்பு முதலிய வண்ணங்களினாற் குழைத்து எழுதி, அத் தோற்றங்களைச் சிறிதும் வழுவாமற் காட்டும் ஓவியக்காரன் மன ஒருமையின் வன்மையை னன்பேம்! இவன் வரைந்து காட்டும் அரிய ஓவியங்கள் அவன்றன் மனத்தை ஒருவழி நிறுத்தும் வன்மையினாலன்றோ யாம் கண்டுகளிக்கக் கிடைக்கின்றன! இரவிவர்மர் எழுதிய மோகினிப் படத்தின் அருமை படத்தின் அருமை பெருமைகளை உற்றுப் பாருங்கள்! காட்டகத்திலே மிக ஓங்கிய ஒரு மரம் நிற்றலும், அம் மரத்தின்றும் பலகையிட்ட ஓர் ஊசல் தொங்குதலும், அழகெல்லாஞ் சேர்ந்து

என்

அவ்வூசலின்கண்ணேயிருந்து

உருவெடுத்தாற் போற்றோன்றும் மோகினியானவள் பவளத் துண்டுபோலுந் தன் மெல்விரல்களாற் கயிற்றைப் பிடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/53&oldid=1576005" இலிருந்து மீள்விக்கப்பட்டது