உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரகம் 121 நெடுந்தூரமா" என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் மேனகா - சந்தோஷத்தால் அல்ல, வெறுப்புணர்ச்சியுடன. "நான் சென்ற தூரம் கிடக்கட்டும், திலோத்தமா! பட்ட கஷ்டம் தெரியுமா?" என்று கேட்டாள். "உனக்கு இடப்பட்ட கட்டளை யாதோ?" என்றாள் ரம்பை. கட்டளையா? ஏண்டி பைத்யமே! அறிவு புகட்டு, அன்பு போதனை செய், ஆண்டவனின் கலியாண குணங்களை அறிந்திடும் வழியைக் கூறு, எனறா நமக்குக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது? பாயத்துக்குச் சம்மதிக்கச் செய்ய வேண்டும், காமப்படுகுழியில் தள்ள வேண்டும், மோக லா கிரியை ஊட்டவேண்டும், கடுந்தவம் புரிவோனைக் காமுக னாக்க வேண்டும், தவமபல புரிந்து, அற்புதம் பல நடாத் தும் ஆற்றல் பெற்றவனை, நாம் பம்பரமாக ஆட்டிப் படைக்க வேண்டும், ஓமத்தீ கொழுந்துவிட்டெரியக் கண்டு களி கொள்ளும் முனிவருடைய உள்ளத்தில் காமத்தீயை மூட்டிட வேண்டும்! நமக்கு இடப்படும கட்டளை இதுதா னேடி. நாமென்ன, நற்குணத்தைத் தரும் பணியைப் புரியவா இங்கு அமர்ந்திருக்கிறோம்! வேடன் கரத்திலே இருக்கும் அம்பு, மாடப்புறாவையோ, மான் குட்டியையோ சாகடிக் கத்தானே பயன்படுகிறது! அரும்பை மலராக்கவா? அது போலத்தானே நாம் இருக்கிறோம்" என்று கோபமும், ஆயாசமும் கலந்த குரலில் மேனகை பேசினாள். "ரம்பாவிடம், நான் இப்போது இதையேதான் சொல் விக் கொண்டிருந்தேன். வரவர இந்தப் பிழைப்பு எனக்குத் துளியும் பிடிக்கவில்லை. பூலோகத்திலே நாம் காண்கிறோம். அவர்கள் பொற்கொடிகளாக இல்லாதிருக்கலாம்; ஆனால் எவ்வளவு கண்ணியமாக வாழ்கிறார்கள். காதலை அவர்கள் தானே,பெறுகிறார்கள்! எட்டுத் திக்கும் வெற்றிக் கொடி நாட்டியவனாயினும், அவனுடைய இன்பவல்லியிடம், பார்த்தனையோ, குழந்தை போலாகிக் கொஞ்சுவதை. மேனகா! அவர்களுக்கு ஆயிரத்தெட்டு அல்லல் இருக்கிறது- எனினும் எதனையும் போக்கிடும் 'காதல்' மாமருந்தாகிறது.