உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோசிக்கிறார் 139 - என்னைப் போட்டு பூட்டிய 'பாவி'கள் சிரிக்கிறார்கள்! நான் கேட்கலாமா, அவர்களைப் பார்த்து? இதென்ன அக்ர மம் - திறந்துவிடுங்கள் என்னை - இல்லையானால் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வரச்செய்வேன், கைகால்களை முறித்துப் போட்டுவிடுவேன் என்று பேசலாமா! அவர்களோ பக்தர் கள்! நானோ அவர்களால் வணங்கப்படும் சாமி. தேவி ! மனம் எவ்வளவு பதறி இருக்குமென்று யோசியுங்கள்" என் றார் கருப்பண்ணர். "கருப்பண்ணரே! அது கிடக்கட்டும், ஏன் பூட்டினார் கள்? என்ன செய்தீர்?" என்று கேட்டார் தேவியார். 'நானா! என்ன செய்தேனோ, அவர்கள் என் எதிரே இருந்துகொண்டு சொல்லி வந்த புளுகுகளை எல்லாம் கேட்டுச் சகித்துக்கொண்டிருந்தேனே, அதுதான் நான் செய்த தவறு; 'போதும், புளுகாதீர்கள்' என்று ஒருதடவை யாவது--ஒரு பக்தனையாவது கண்டித்திருந்தால், அவர் களுக்கு அன்று அவ்வளவு துணிவு வந்திருக்காது" என்றார் கருப்பண்ணர். "உன்னை ஒரு தனி இடத்தில் போட்டுப் பூட்ட வேண் டிய அவசியம் என்ன வந்தது?" என்று மீண்டும் கேட்டார் தேவியார். சலிப்பும் வெறுப்பும் கலந்த குரலிலே கருப்பண்ணர் சொன்னார்: "ஏன் பூட்டி வைத்தார்கள் என்றா கேட்கிறீர் தேவி! நான் அவர்களின் "சாமி'யாம். அதனாலே என்னை வேறே சில பக்தர்கள் கொண்டு போகாமலிருப்பதற்காக, என்னைப் போட்டு பூட்டி வைத்தார்கள். அவ்வளவு 'பக்தி' என்னிடம். வேறெந்த பக்தனிடமும் நான் பேசிவிடக்கூடாது அப்படி ஒரு எண்ணம்- "என்றார் கருப்பண்ணர். 'இதென்ன பைத்யக்காரத்தனமான எண்ணம்!'- என்று தேவி கேலியாகப் பேசினார்கள். " இவர்கள் கண்ட தையும் கடியதையும், வேகாததையும் பழுக்காததையும் தின்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் என்னை வந்து கேட் கிறார்களே, தேவி! 'கருப்பண்ண ஸ்வாமி! என்னைக் காப்