உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

❖ - 5 → மறைமலையம் – 5

கண்ணிமைகொட்டும் முன் இவ்வளவு தொலைவிடஞ் செல்கின்ற ஒளியானது, சிலவான்மீன் மண்டிலங்களில் இருந்து இங்கு வருதற்குஐம்பது ஆண்டுகளுக்குமேற் செல்கின்றது.இப்படியானால் அவ்வான்மீன் மண்டிலங்கள் இந் நிலவுலகத்திற்கு எவ்வளவு தொலைவில் இருக்கவேண்டு மென்பதைச் சிறிது நினைந்து பாருங்கள்! இத்தனை தொலைவிலுள்ள வான் உலகங்களுக்கும் இந் நிலவுலகத்திற்கும் இடையிலே நிறைந்து நின்று இவற்றையெல்லாம் இணைப்பதற்கு இடைவெளி ஒன்று இல்லாவிட்டால் அவ்வான்மண்டிலங்களில் உள்ள ஒளியானது இங்கே எவ்வாறு வரக்கூடும்? இன்னுங் காதுக்கு எட்டுந் தாலைவிலேயிருந்து ஒருவர் பாடும்போது அப்பாட்டின் ஓசையானது நமது செவியில் வந்து படுவதைப் பாருங்கள்; தொலைவிலிருந்து பாடும் அவருக்கும் இப்பாலிருந்து அதனைக் கேட்கும் நமக்கும் இடையிலே வான்வெளி ஒன்று இல்லா விட்டால் அவ்வோசை நஞ்செவிக்கு எவ்வாறு எட்டும்? ஆகவே, ஓசையும் ஒளியும் உலவுதற்கு மாய் எங்கும் நிறைந்துள்ள வான்வெளி ஒன்றுண்டென்பது நன்கு பெறப் படுகின்றதன்றோ?

நுண்

இனி,இவ்விடைவெளியில் நுண்ணணுக்கள் நிறைந்துள்ளன. இவ்வெளியின்கண் எங்கேனும் ஓரிடத்தில்ஒளியாவது ஓசையாவது தோன்றினால் அது தோன்றியவிடத்திலேயுள்ள ணணுக்கள் அதனால் அசைவு பெற்றுத் தம் பக்கத்தே யுள்ள நுண்ணணுக்களை அசைக்கும்; அந் நுண்ணணுக்கள் தம்மோ டிணைந்து நிற்கும் அணுக்களை அசைக்கும்; இங்ஙனம் ஒன்று மற்றொன்றை அசைக்கக் கடைசியாக நங் கண்ணிலுஞ் செவியிலும் நிறைந்த நுண்ணணுக்கள் அசைந்து நமக்கு ஒளியினையும் ஓசையினையும் புலப்படச் செய்கின்றன.

வ்

வ்

வியல்பை ஓர் எடுத்துக்காட்டால் விளக்குவாம்; அகன்ற ஓர் ஏரியில் நிறைந்த நீரின் நடுவே ஒரு கல்லை விட்டெறிந்த வழி, அக்கல் விழுந்த இடத்திலுள்ள நீரின் அணுக்கள் அசைந்து தம் பக்கத்தேயுள்ள நீரின் அணுக்களை அசைக்க, அவை தம் பக்கத்தேயுள்ள அணுக்களை அசைக்க, இவ்வாறு அந்நீரின் அணுக்கள் எல்லாம் நாற்புறமும் அலைஅலையாய் அசையக், கரைவரையில் அவ்வியக்கம் வந்து திரும்புவதைப் பாருங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/47&oldid=1576487" இலிருந்து மீள்விக்கப்பட்டது