காதல் மயக்கம்
67
மிகவும் நல்லவர்களாகக் காணப்படுகிறீர்கள்; எங்கள் வீட்டுப்பசு தாம்பைறுத்துக் கொண்டு இப்பக்கமாக ஓடிற்று.என்னொருத்தி யால் அதைத் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. சற்று எனக்கு ஒத்தாசை செய்வீர்களா?" என்றாள்.
அவள் வேண்டுகோளைச் சதாசிவனால் மறுக்க முடிய வில்லை. அவளுடனும் அவளை விட்டகன்று வேறிடத்திலும் சுற்றி யலைந்து பசுவைப் பிடிப்பதற்கு இரண்டு மூன்று நாழிகை யாகிவிட்டது. அதற்குள் பொழுது சாய்ந்து கருக்கிருட்டாயிற்று. அப்பெண்ணணங்கு பசுவின் அறுந்த தாம்பைப்பற்றிக் கொண்டு வரும் அவனை நகை முகத்துடன் வரவேற்று நன்றி கூறினாள். என்னை யார் என்று கூட உங்களுக்குத் தெரியாது. அப்படி யிருந்தும் பெருந்தன்மையுடன் செய்த உதவி நான் மறக்கக் கூடியதல்ல. நீங்கள் யாரோ? உங்கள் நலங்கள் அறிய விரும்பு கிறேன்” என்றாள்.
66
சதாசிவனுக்கும் இதற்குள் அவனுக்கு இயற்கையான கூச்சமுழுதும் அகன்றுவிட்டது. அவன் அவளைப் பற்றி உசாவி அறிந்தது போலவே அவனும் அவளைப் பற்றி உசாவினான். அவள் தன் பெயர் ஆனந்தி என்று கூறவே அவனுக்கு உடனே அப்பு கூறிய பெண் இவளே என நினைவுக்கு வந்தது; பொது மகளிர் காதலை அறிய நினைத்த தன் நினைப்பின்படி ஒப்பற்ற அழகியான இந் நங்கையை நேரிலறிய வாய்ப்பு ஏற்பட்டதென்று அவன் மகிழ்ச்சி யுற்றான். அவர்களிருவரும் பழக்கமானவர்கள் போலப்பேசிக்கொண்டே ஊரை நோக்கி வந்தனர். அப் பேச்சிடையே அவள் கவர்ச்சியும் எளிமையும் அவன் அடிக்கடி அவளைக்கூர்ந்து கவனிக்கும்படி செய்தன. அச்சமயங்களில் அவள் சற்று முகத்தைத் திருப்பிச் சாய்ந்த பார்வையுடன் புன்னகை செய்தாள். தன் அக உணர்ச்சியை அளவையாகக் கொண்டு அவளும் தன்னைக் காதலிக்கிறாள் போலும் என்று அவன் கருதினான்.
உண்மையான காதலின் தன்மை, அதன் அறிகுறிகள் ஆகியவற்றைப்பற்றி நூல்களில் படித்த அவனுக்குக் கண் கண்ட காரிகையான அவள் மூலமே அதனை ஆராய்ந்தறிய வேண்டு மென்ற அவா ஏற்பட்டது. ஆகவே, அவன் “நீ என்னை மிகப் பெரிதாக நினைத்துவிட்டாய். எனக்கு உண்மையில் பணமோ