2. பிள்ளைத் திருட்டு
"எனக்கு இது பிடிக்கவில்லை, கங்கு! இந்தக் கடைசிக் கட்டத்திலாவது இம்முயற்சியை ஒழித்துக் கட்டிவிட்டுக் கவலையில்லாமலிருக்கலாமே” என்று இராமகிருஷ்ணன் தன் மனைவி கங்கையம்மாளைப் பார்த்துப் பரிவுடன் கேட்டான்.
இராமகிருஷ்ணன் இச்சமயம் தெருவாயிற் படியில் நின்று கொண்டிருந்தான். அவன் நல்ல உடற்கட்டுடையவன்; வயது ஏறத்தாழ முப்பத்தைந்து இருக்கும். அவன் மனைவி கங்குவுக்கும் வயது முப்பதேதானிருக்குமானாலும் அவள் சற்றுப் பருத்த உடலுடையவளாயிருந்தாள். அதிலும் இப்போது அவள் கருப்ப முற்றவளோ என்னும்படியான தோற்றம் உடையவளா யிருந்தாள்.
இராமுவின் அமைதியான கேள்விக்குக் கங்கு வெடுக் கென்று விடை கூறினாள். “இவ்வளவுதானா உங்கள் வீரதீரம்! காதுவரை மீசையை முறுக்கி விட்டுக்கொண்டிருப்பது இதற்குத்தானா? குழந்தையாவலோ என்னைப்போல் உங்க ளுக்கும் இருக்கிறது. எனக்கு இனிப்பேறு இருக்காதென்றும் உங்களுக்குத் தெரியும். அப்படியிருந்தும் ஏன் இவ்வளவு தயக்கம்?”
இராமு: ‘என்ன அப்படி வந்துவிட்டது இப்போது? இனி உனக்குக் குழந்தை பிறக்கப் படாதா என்ன?'
66
கங்கு : 'அதெல்லாம் ஒரு நாளுமில்லை. என்னைப் போலப்பருத்த உடலுடையவர்களுக்கு இந்த வயதுக்கு மேல் பிள்ளைபிறப்பது அரிது, நான் ஒரு மலடியாய் இருக்க வேண்டுமென்று இராவிட்டால், மணமாகி இந்தப் பதினைந்து ஆண்டுகளாக எப்போதாவது கருத்தங்கியிராதா? ஏனிவ்வளவு!