உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அப்பாத்துரையம் - 25

தவறா? இவ்வொரு குழந்தையாவது வறுமையில் வாடாமல் பார்ப்பது புண்ணியமாயிற்றே! இதனால் மற்றப்பிள்ளை களுடைய நிலைமை கூடச் சற்று மேம்படும். தாய்தந்தையருக்கும் தால்லை குறைவு. இதனால் பழிபாவம் வந்து விடு மென்றுதயங்கவேண்டாம். போய் விரைவாகக் காரியத்தை

முடியுங்கள்”

எப்படியும் திருட்டுத் திருட்டுத்தானே என்று எண்ணிய இராமகிருஷ்ணனுக்கு உள்ளூர இக்காரியத்தில் மனம் செல்லவில்லை. ஆனால் மனைவியின் உருக்கமான பேச்சும் அவள் உணர்ச்சியும் அவன் ஒழுக்கக் கோட்பாட்டைத் தகர்த்துத் தள்ளின. அவன் வேண்டாவெறுப்பாய் இக்காரியத் துக்கு ஒத்துக்கொண்டான். “சரி, அப்படியே ஆகட்டும். ஆனால் இதில் ஒரு சிறிது பிழை ஏற்பட்டாலும் நாம் ஒரு பெரும் புயலை எதிர்க்கவேண்டி நேரிடும்" என்று கூறியவனாய், அவன் பயணத்துக்கு ஆயத்தமானான்.

கங்கு தன்காரியம் கைகூடவேண்டுமே என்ற கவலையில் இரவு முழுவதும் ஊணுறக்க மில்லாமல் தெய்வத்திற்கு வேண்டு கோள் செய்து நேரம் போக்கிக்கொண்டிருந்தாள்.

இராமு, கங்கு ஆகிய இருவர்களின் ஆழ்ந்த சூழ்ச்சித் திட்டத்துக்கு ஆளான குடும்பம் சீதை என்பவளின் குடும்பமே. சீதை அடுத்த ஊராகிய திருக்கோவூர்க் கோயில் குருக்கள் சேஷுவின் மனைவி. அவர்கள் வறுமைக் கடலில் உழல்பவர்கள்; அந்நிலையில் மணமானது முதல் ஆண்டுதோறும் சீதை ஒரு குழந்தையைப் பெறத் தவறுவதில்லை. இப்போது இரண்டு குழந்தைகளுக்குப்பின் மூன்றாவது குழந்தையை ஈன்றிருந்தாள். அதுவும் எல்லாம் ஆண் குழந்தைகள். (அவர்கள் வகுப்பில் பெண்களுக்குப் பரிசம் கொடுத்து வாங்குவது வழக்கம். ஆதலால் பெண்கள் பிறப்பதே செல்வம்; ஆண்கள் பிறப்பது வறுமை)

ஏழை, பணக்காரர் பார்த்துப் பிள்ளைகளை நேர்மை யாகப் பங்கிட்டுத் தராத தெய்வத்தின் பிழையைச் சரிப் படுத்தத் திருக்கோவூரில் கண்கண்ட தெய்வமாக 'நங்கி' என்ற மருத்துவச்சி ஒருத்தி இருந்தாள். பிள்ளை வேண்டாம்