அப்பாத்துரையம் - 25
106 ||___ உயர் ஊதியம் பெற எண்ணி ஹரிஹரன் இரவு பகலாய் அறுபது நாழிகையும் எல்லாத் துறைவகைகளிலும் புகுந்து யாரும் விருப்புறும்படி உழைத்தான். ஆசிரியர் காட்டிய மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் அளவேயில்லை. அடிக்கடி தலையங்கம் எழுதும் வேலைகூட அவனுக்குக் கொடுக்கப்படவே அவன் வியப்பும் இறும்பூதும் அடைந்தான். மாத இறுதியில் 15 ரூபாய்க்கு ஓர் அடைவுச் சீட்டும் (செக்) நன்றியறிதலுடன் கூடிய விடுதலைச் சீட்டும் அவனுக்கு அனுப்பப்பட்டது. 'இது என்ன முறை ஐயா' என்று அவன் சென்று கேட்க, ‘உன் உழைப்புக்கேற்ற ஊதியமிது. மூளையில்லா உழைப்புக்கு இவ்வளவுதான் யார் கொட்டித் தருவார்கள்!' என்றார் ஆசிரியர்.
ஹரிஹரன் இவ்வவமதிப்பைப் பொறுக்கமாட்டாமல் "வேலைவாங்கிப் பயன்படுத்திக்கொண்ட பிறகு நன்றி யில்லாமல் மூளையில்லை யென்று கூறுவது அடுக்குமா” என்று கேட்டான்.
ஆசிரியர்: ஊதியம் கொடுக்குமிடத்தில் நன்றி எதற்கு? அப்படியும் உம் விடுதலைத்தாளில் நன்றி தெரிவித்தேயிருக் கிறோம். நீர் வழக்காடியதனால் தான் உம்மைப்பற்றிக் கூற நேர்ந்தது. நீரே சொல்லும், மூளையுள்ளவன் எவனாவது ஊதியம் பேசாமல் உழைக்க வருவானா என்று?
'தொழிலுக்கு இணை எதுவுமில்லை; இப்படிச் சேவகம் செய்வானேன்' என்ற எண்ணம் ஹரிஹரன் மனத்தில் அரும் பிற்று. ஆனால் 'படிப்பையும் பயன்படுத்தி நுணுக்கத் துறைகளில் ஈடுபடுவோம்' என்று எண்ணி அதுவகையில் நாட்டம் செலுத்தினான். பல்தொழில் நுட்பக் கழகம் (Poly - Technical Institute) ஒன்றில் சென்று தொழில் நுட்பப்பட்டியலைக் கவனித்தான். இரட்டை மாட்டு வண்டியோட்டல், பனைமர மேறுதல், கால்நடைப் பண்ணை, பால்பண்ணை, கையச்சு முதலிய தொழில்களிருந்தன. பயிற்சிக் காலத்திலேயே 30 ரூபாய் ஊதியம் தரப்படுவதை எண்ணிச் சிரித்தான். ஆனால் இத்தொழில்களைத் தொழிலாளிகளிட மிருந்தே இன்னும் சிறப்பாகப் பழக முடியும் என்று கண்டு மூன்று நாளைக்குள் அதனையும் விட்டான்.
முழு நிறை தோல்வியுடன் இங்ஙனமாகத் தன்னுடைய உத்தியோக வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவன்