136
|--
அப்பாத்துரையம் - 25
வந்தசமயம் ஆள் சந்தடிகூட நிற்கவில்லை. பலர் அங்குமிங்கும் போய்க் கொண்டுதானிருந்தார்கள். ஆயினும் மாலை எதையும் கவனிக்காமல் அவர்மேல் பாய்ந்து அப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
அதன்பின் என்ன நடந்ததென்று கூறத்தேவையில்லை. தெருவில் பலர்கூடி வீட்டினுள் நுழைந்து பெட்டியை உடைய வரிடம் ஒப்படைத்ததுடன் எல்லாரும் சேர்ந்து அவனை நைய அடித்தனர். அவன் வீடு திருடன் வீடு என்று பெயரடைந்தது.
மாலையின் இம்முதல் வீரச்செயல் பார்வைக்குப் பித்துக்கொள்ளித்தனமானதா யிருந்தாலும் அவன் மட்டில் அது வீண்போகவில்லை. அதனின்றும் அவன் தன் வாழ்க்கை யின் முதல் படிப்பினையை அடைந்தான். “கொள்ளையிடுவ தானால், உன் வீட்டின் பக்கமே கொள்ளையிடாதே” என்றும்; மேலும் "கொள்ளை கொடுப்பவன் தனியே யிருக்கும் சமயம் கொள்ளையடிப்பது நல்லது” என்றும் உணர்ந்தான்.
அடுத்த தடவை மாலை தன் வீட்டிலிருந்து ஐந்து கல் தொலைவு நடந்துசென்று தனியே செல்லும் ஒருவனிடமிருந்து அவன் கொண்டு சென்ற பொருள்களைப் பறிக்க முயன்றான். அவன் ஆள் வாட்டசாட்டமாயிருந்ததனால் நெடுநேரம் போராடினான்.இறுதியில் மாலை வெற்றிகரமாகப்பொருளைப் பறித்தான். ஆனாலும் பறிகொடுத்தவன் அடுத்த காவல்காரர் நிலையத்தில் அவனைப்பற்றிய முழுவிவரமறிவித்ததால் அவன் எளிதில் பிடிப்பட்டுத் தண்டனை யடைந்தான்.
வழிப்பறியைவிட ஒளிந்து திருடுவது நல்லது என்ற பாடம் அவனுக்குக் கிடைத்தது.
காவலிலிருந்து விடுதலையானபின் குளத்தில் கைகால் அலம்பச் சென்ற ஒருவன் கரையில் வைத்த மூட்டையை மாலை தூக்கிக் கொண்டோடினான். ஆனால் மூட்டைக்காரன் அதைக் கண்டு துரத்தியோடிப் பிடித்துக்கொண்டான். திருடியபின் தப்பித்துக்கொள்ள நேரம் இருக்க வேண்டும் என்பது அவனுக்குப் புலப்பட்டது.
சில நாட்கழித்து மாலை கட்டவிழ்த்துத் திரிந்த ஒரு பசுவைக்கொண்டு சென்று கொன்று தசையைத் தின்றுவிட்டுத்