உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

185

பார்வதிக்கு இவ்வேதாந்தங்களால் சிறிதும் மனஅமைதி ஏற்படவில்லை. “எது எப்படியானாலும் என்னால் இனித் தாங்க முடியாது. ஒன்று கடவுள் இனிமேல் எனக்குக் குழந்தையில்லாது செய்யவேண்டும். அல்லது இந்தப் பேறோடு என் உயிரை வாங்கிக் கொள்ளவேண்டும்" என்றாள்.

அம்பி: குழந்தையும் சரி, உயிரும் சரி, தெய்வம் தரும் நன்கொடைகள். அவற்றை வேண்டாம் என்று கூறுவதும் எண்ணுவதும் கூடத் தெய்வ நிந்தனையாகும். அவற்றால் எவ்வளவு துன்பம் வந்தாலும் பொறுத்துக்கொண்டே யாக வேண்டும். மரம் வைத்தவனுக்கல்லவா தண்ணீர் விடும்கவலை. அவன் மரத்தை வளர்த்தாலும் சரி, வாட வைத்தாலும் சரி, நமக்கென்ன?

பார்வதிக்கு ஒன்றும தோன்றவில்லை. “நம் வருவாயாவது சற்று அதிகப்படக் கூடாதா? பிள்ளைகளுக்குக் கஞ்சிக்காகவது வகை செய்ய வேண்டாமா?” என்று அவள் கண்கசிந்தாள்.

அம்பி: நான் என்ன செய்யட்டும். எளிதாக வந்து கொண் டிருந்த வருவாயில் போட்டிவந்து குடிகெடுக்கிறது.கொடுப்பவர் குறைத்தே கொடுக்கின்றனர். கேட்டால் வேண்டாம். போ என்கிறார்கள். உனக்குத் தான் தெரியுமே. விறகு வண்டிக்காரர் களை எல்லாரும் மோர்குடிக்கக் கொடுத்து வசப்படுத்துவது பார்த்து நாமும் மோர் வாங்கி வைத்தோமே! நம் குசேல பரம்பரை அவற்றை வைத்துப்பார்க்காமல் விட்டனவே! செல்வர்களுக்குச் செல்வத்தோடு செல்வம் வட்டி சேர்வது போல், நமது வறுமையின் மூலம் வறுமையோடு வறுமை வட்டி சேர்கிறது.

கணவனுடன் பேசி இனிப் பயனில்லை என்று பார்வதி வாளா இருந்தாள்.

Π

கணவனின் சமய வேதாந்தம் பார்வதிக்குப் பிடிக்க வில்லை யென்றால் அவன் அரசியல் வேதாந்தம் அதனிலும் கசப்பாகவே இருந்தது. 'பிள்ளையோ பிள்ளை' என்ற அவள் வாழ்க்கை யிடையே ஒரு சமயம் அவள் “இந்த வறுமைப் பேய்கள் பிறந்து