உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் -6

என வரையறுக்கிறார் அடிகளார்.

லக்கிய வரலாற்றுத் திறனுக்கு உதவும் ஆசிரியரின் மத வரலாற்று அறிவு

இலங்கை புத்தகுரு ஒருவரை வாதம் செய்து வாதவூரர் வென்றமை அவர்தம் வரலாற்றால் அறிய இயலுகிறது. மணிவாசகர் வாக்கில் புத்த சமயம் அக்காலத்தில் சல்வாக்குப் பெற்றிருந்தது கூறப்படுகிறதே தவிர, சமண சமயம் பற்றிய குறிப்பில்லை.

புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயந் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்க

(திருத்தோணோக்கம், 6)

என வரும் குறிப்பில் அவர் சமண சமயத்தைக் கூறினாரில்லை. சமண சமயத்தை அவர் காட்டாமையால், தமிழகத்தில் சமண சமயம் செல்வாக்குப் பெறாத காலத்திற்கு முன்பே, அவர் வாழ்ந்திருந்தார் என விளக்குகிறார் அடிகள்:

66

'அவர், புத்த சமயம் ஒடுங்கிச் சமண சமயம் மிக்கு ஓங்கிய பின் நூற்றாண்டுகளில் இருந்தனராயின், அங்ஙனமிருந்த திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் மூவருந்தாம் அருளிச் செய்த திருப்பதிகங்களுள் அச் சமண மதத்தவரையும் குறிப்பிட்டவாறு போல், தாமும் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறவர் தாம் அருளிச் செய்த 'திருவாசகம்’,‘திருச்சிற்றம்பலக் கோவையார்' என்னும் நூல்களில் ஓரிடத்தாயினும் சமண மதத்தைக் குறிப்பிட்டுரையாமையாலும் அவர் குறிப்பிட்டுக் கூறிதெல்லாம் 'புத்த சமயம்' ஒன்றே யாகலானும், அவர் சமண சமயம் மேலோங்கி நிலவிய காலத்திருந்தவர் அல்ல ரென்பதூஉம், அதற்குமுற் புத்த சமயம் கிளர்ந்து நின்ற காலத்திருந்து அதனை ஒடுக்கியவராவர் என்பதூஉம் தெளியப்படும்." (பக். 299)

மாணிக்கவாசகர் வாக்கில், 'மிண்டிய மாயாவாதம்’ என வருவதைப் பிற்காலச் சங்கரர் விளம்பிய மாயாவாதத்தோடு ஒப்பிட்டு, சங்கரருக்கும் பிற்பட்டவராக மாணிக்கவாசகரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/285&oldid=1577769" இலிருந்து மீள்விக்கப்பட்டது