284
மறைமலையம் 6
ஆசிரியர் சோமசுந்தர நாயகர் ஒரு பெரிய வேதாந்தி. அவருடைய பேருதவியால்தான் நான் தமிழையும், வடமொழி யையும் ஆராய்ச்சி செய்ய முடிந்தது. அவர் செய்த நன்றியை நான் எக்காலத்திலும் மறக்க முடியாது. துயில் நீங்கி எழுந்த வுடன் என் ஆசிரியரின் நிழலுருவப் படத்திற்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். அன்றாடம் என் ஆசிரியருக்கு வணக்கம் செலுத்துவதில் நான் தவறுவதில்லை!
நம் மக்கள் முன்னேற்றத்திற்குஞ் சிவபிரான் திருவடிக்கும் நாம் இயற்றுந் தொண்டு அவ்வுண்மையே நோக்கியதாய் இருக்க வேண்டுமே யல்லாமல், ஆரவாரமான பட்டங்கள் சூட்டிக் கொள்வதற்கென்று நடைபெறல் ஆகாது.
காசையே பெரிதாக எண்ணி வயிறு கழுவி மாண்டு போகும் ஆட்களில் யான் ஒருவன் அல்லன்.
நோன்பியற்றும் அறையில் இரவிவர்மரைப் போன்ற ஓவிய ஆசிரியர்களால் வரையப்பட்டத் தேவவடிவங்களும், முனிவர்கள், சமய குரவர்கள், அடியவர்கள், புலவர்கள், அரசரின் உயர்ந்தோர்களின் வடிவங்களுந் திருத்தமாய் அமைந்த ஓவியங்களையே தெரிந்தெடுத்து, அவற்றின் தலைப்புறத்தை முன் சாய்த்துச் சுவர்களிற் சூழ நிறுத்துக.
அவ்வறை அமைதியான னிய மணம் நிறைந்து கமழ்வதாய் இருத்தல் வேண்டும். அகில், சந்தனம், கோட்டம், துருக்கம், தகரம், பச்சைக் கருப்பூரம், புனுகுநெய் முதலான மணப் பண்டங்கள் கலந்த கூட்டுகள் புகைத்தலாலும், மருகு, மருக்கொழுந்து, விலாமிச்சை, வெட்டிவேர் முதலான பூடுகளையும், மகிழ் மல்லிகை, பிச்சி, செங்கழுநீர், சண்பகம், அல்லி, குவளை, தாமரை முதலான பூக்களையும் அவ்வறையுள் வைத்து வழிபடும் இறைவன் திருவுருவத்திற் நாடோறும் அணிதலாலும் அவ்விடம் என்றும் மணங் கமழ்வதாய் இருக்கும்.
ம்
மனமொழி மெய்களான் யான் இதுகாறும் எவர்க்குந் தீது செய்ததின்மையான் பிறர் செய்த தீமைகளையும் விரைவில் மறந்து விடுதலே என் இயற்கை.