286
உ
மறைமலையம் -6
எவரோடு எக்காலத்து எத்துணைச் சிறந்த பொருளைப் பற்றியாம் உரையாடிக் கொண்டிருப்பினும் அவ்வவ் வேளைக் கடமைகளைச் செய்தற்குரிய காலம் அணுகுகையில் அவை களைச் செய்தற்கு நீ அழைக்கலாம் என்று எம் மனைவியார்க்கு அவ்வுரிமையினை வழங்கினோம்.
பழந்தமிழ் நூல்களில் செல்வர்கள் தங்கள் செல்வத்தை 32 வகையான அறக் கட்டளைகளுக்கு வரையாது வாரி வழங்கினர் எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வறக் கட்ட ளைகளால் தன்னகத்தின் பல பகுதிகளில் பல நூறாயிரக்கணக்கான பொன் பெறுமானமுள்ளனவாய், வீறார்ந்த கலைத்திறனோடு
பல
கட்டப்பட்ட கோயில்களை அடைந்துள்ள நாம் அச்செல்வர்களது எல்லையில்லாப் பெருந் தன்மைக்கு நன்றி காட்டக் கடமைப் பட்டிருக்கிறோம்.
தமது வாழ்க்கைச் செலவிற்கும், மணச் சடங்கு பிணச் சடங்கு கட்கும் கடன் வாங்கியாகிலும் மிகுதியாகச் செலவழிக் கின்றார்கள். அவையெல்லாம் பெருஞ் செலவாக அவர் களுக்குத் தோன்றவில்லை. எப்போதோ அருமையாக வாங்கும் இரண்டொரு நூலுக்காகுஞ் செலவையே பெரிதாக நினக் கிறார்கள். இப்படி யிருந்தால் நம் தமிழ்நாடு எக் காலத்தில் முன்னேற்ற மடையுமோ தெரியவில்லை. இறைவன் அருள் செய்க!
.
காலங்கடோறுந் தொடர்ந்து நிகழும் மாறுதல்களை நன்காராய்ந்து பார்த்து, அவற்றிற்கேற்ப நமது வாழ்க்கையின் பழைய நிலைகளை அறவே யொழித்தோ அல்லதவற்றுட் சீர்திருத்தற் பாலனவற்றைச் சீர்திருத்தியோ ஒழுகினாலன்றி மக்கள் வாழ்க்கை இனிது நடவாது.
அன்பும் அருளும் இரக்கமும் ஓங்குக!
இன்பமும் மகிழ்ச்சியும் எங்கும் தங்குக!!