உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12. ஹாரியும் சேஸ் பெருமகனும்

சிறுவனுக்கு ஆடைகள் வாங்கும் நோக்கத்துடன் ஹாரியும் டாமியும் மறுநாள் புறப்பட்டுச் சென்றனர். போகும் வழியில் அவர்கள் இரங்கத்தக்க ஒரு காட்சி கண்டனர்.நன்கு கொழுத்த கொடிய வேட்டை நாய்கள் சில சேர்ந்து ஒரு சிறுமுயலைத் துரத்தித் துரத்தியடித்துக் கொண்டிருந்தன. களைத்துப் பலவகையில் காயமுற்று நலிந்தும் முயல் அவற்றுக்குப் பிடிகொடாமல் தப்பியோடிற்று. ஆயினும் நாய்கள் அதனை மோப்பம் பிடித்துத் தொடர்ந்தன. ஹாரி நின்ற இடத்துக்குப் பக்கத்திலுள்ள சாலைகளில் ஒன்றன் வழியாக அது ஓடி மறைந்தது.

டாமி இக்காட்சியைக் கண்டு “இச்சிறு முயலை இத்தனை கொழுத்த வேட்டை நாய்கள் சேர்ந்து வேட்டையாடுவானேன்?” என்றகேட்டான்.

ஹாரி

து

இந்நாய்களின் வரலாறு அறிந்தவர்களுக்கு இது வழக்கமான செயல். இந்நாய்கள் சேஸ் பெருமகனுக்கு உரியவை. அவன் விலங்குகளையும் மனிதர்களையும் கொடுமைப்படுத்து வதையே பொழுதுபோக்காகக் கொண்டவன். ஏழைகள் அவன் பெயரைக்கேட்டால் நடுங்குவர். அவனைக் கண்டால் கரடி புலியைக் கண்டது போல் வெருவியோடுவர். காணாதபொழுது அவனை வெறுப்பர். அக்கொடியவன் விலங்குகள் மீது மட்டுமன்றி மனிதர் மீது கூட இவ்வேட்டை நாய்களை ஏவுவான்.

டாமி

பெருமக்களில் இவ்வளவு கொடியவர்கள் இருக்கி றார்கள் என்பது எனக்குத் தெரியாது. இப்போது நாம் என்ன செய்யக்கூடும்?