உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

149

குதிரை வண்டியை வரவழைத்து அதில் அவனை அனுப்பி வைத்தார்.

மகனின் எதிர்பாரா வருகைகண்டு தாய் தந்தையர் வியப்புற்றனராயினும் வியப்பினும் மிக மகிழ்ச்சி உற்றனர். முதல்முதல் நலஉசாவு வினாக்கள் முடிவுற்றதும் அவன் அவர்களிடம் தனக்கு நாற்பது பொன்கள் வேண்டுமென்று கோரினான். தாய்தந்தையர் இக்கோரிக்கை கேட்டுக் காரணமறியாமல் மலைப்புற்றனர். ‘உனக்கு ஏன் அத் தொகை' என்று அவர்கள் கேட்டதற்கு அவன், “சிறிது நாள் பொறுங்கள். உங்களுக்குத் தெரியவரும். நான் அதனை எந்தத் தீயவழியிலும் செலவு செய்யமாட்டேன் என்று நீங்கள் று உறுதியாக நம்பலாம்" என்றான்.

,

டாமியின் ஆர்வ முனைப்புக் கண்டு திரு மெர்ட்ட உள்ளூர மகிழ்ந்தார். இது டாமியிடம் இதுவரை காணப்படாத புதிய பண்பு என்பதை அவர் நுனித்துணர்ந்தார். ஆகவே அவனிடம் முழு நம்பிக்கையுடன் அத்தொகை தந்தார். ஆயினும் அது தீயவழியில் செலவு செய்யப்பட்டதாகக் கண்டால் பின் இதுபோல் கொடுக்க முடியாமற் போகலாம் என்று மட்டும் எச்சரித்தார்.

66

66

பின்பு டாமி ஹாரியை இட்டுக்கொண்டு டாஸ்ஸெட் குடியினரின் இல்லம் சென்றான். திருமதி டாஸ்ஸெட் அப் போதும் கவலையுடன் கண் கசிந்து கொண்டு தானிருந்தாள். சிறுவரை அவள் அன்புடன் வரவேற்றாள். டாமி அவளிடம் 'அம்மா, நீங்கள் எங்களிடம் எவ்வளவோ பரிவு காட்டி னீர்கள். இப்போது உங்களுக்கு இன்னல் நேர்ந்திருப்ப தறிந்து நாங்களும் பரிந்து உதவ ஒருங்கியிருக்கிறோம்” என்றான். ‘குழந்தைகளே, எங்களிடமிருப்பதை உங்களைப் போலுள்ள குழந்தைகள் எப்போதும் துய்க்கலாம். எங்களுக்கு அவ்வழி யிலேயே நீங்கள் மகிழ்ச்சி ஊட்ட முடியும். ஆனால் எங்களுடைய இப்போதைய இன்னல் மிகப்பெரிது. நீங்கள் ஆறுதல் தர முடியும். ஆனால் உதவ முடியாது. எங்களாலும் ஒன்றும் செய்வதற்கில்லை. கடனில்லாமல் உழைத்து நாங்கள் நல் வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள்தான். எங்களாலியன்றவளவு பிறருக்கும் உதவுபவர்கள்தான். ஆனால் நாற்பது பொன்