பேரின்பச் சோலை
93
பெற்றோர், உன் உடன்பிறந்தார், சுற்றத்தார் ஆகியோர்க்கு உதவி செய் அவர்கள் நலம் பேணு. பெருமை பெரும்பரப்பில் மட்டும் தான் என்ற மயக்கில் ஆழ்ந்துவிடாதே. சிறிய பரப்பில் பயின்று முதிர்வுற்ற பண்பன்றி வேறெதுவும் பெரும்பரப்பில் செயலாற்ற முடியாது. ஒரு மையத்தில் தொடங்கிச் சிறிய பரப்பில் தோய்ந்தன்றி அன்பலைகள் அகல்வெளியில் பரவமாட்டா.
பல ஆண்டுகள் இடையறாது தன்னல இன்பங்களில் உழன்றவன் இயல்பாகப் பெரும் பழிச்சுமைகளைச் சுமக்க வேண்டியவன் என்பது உண்மையே. இவற்றைச் சமயவாணர் வலியுறுத்தத் தயங்குவதுமில்லை. ஆனால் சமயப் பெரியாராகக் கருதப்படும் பலரே - தம்மைச் சமயத்திற்குச் சிறப்புரிமை யுடையவரென்று தாமே கருதிக் கொள்ளுபவர்களே, இவற்றி லிருந்து விடுபட, பிறரை விடுவிக்க முயல்வதற்கு மாறாக, அடிக்கடி இவற்றிலேயே ஆழ்ந்து, இவற்றையே இருவேறு வகைகளில் தம்மை உண்மை விடுதலையிலிருந்து பிரித்து வைக்கும் இரட்டைச் சிறைக் கோட்டமாக்கிக் கொள்கின்றனர். உண்மைப் பெருமையைத் தாம் அடையாததுடன், இத் தகையவர்கள் பிறரையும் அத்திசையில் செல்லவிடாமல் தடுப்பவர்களாய் விடுகிறார்கள்.
இத்தகையவர்களில் ஒருசாரார் தாமே தம்மீது சுமத்திக் கொண்டுவிட்ட இச்சுமைகளைப் பரமன் தமக்கருளிய ய “சிலுவைத் தியாகங்கள் என்றோ, சோதனைகள் என்றோ பெருமைப்படுத்திக் கொள்கின்றனர். இத்தண்டனைகளைத் தம்மீது சுமத்தியதன் மூலம் தம்மை இறைவன் தனிச் சிறப்புக் குரியவர்களாகத் தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் அவர்கள் தருக்கிக் கொள்கின்றனர். இதற்கு நேர்மாறாக இன்னொரு சாரார் இன்னொரு வகைத் தற்செருக்கை மேற்கொள்கின்றனர். இச்சுமைகள் தம் செயலால் வந்தவை என்று அவர்கள் கருதுவ தில்லை. அவை ஊழ்வயத்தால், அல்லது சூழல் காரணமாக அல்லது சமுதாயத்தின் செயலால் விளைந்தவை என்று கருதி விடுகின்றனர். சுமைகளுக்குரிய காரணங்களை புறப்பண்புக ளாக்குவதன் மூலம் இவர்கள் தாம் அநீதி செய்தவர்கள் என்பதை மறைத்து, அநீதிக்கு ஆளானவர்கள் தாங்கள் என்று கருதுகின்றனர். தாம் குற்றவாளிகள் என்று கண்டு தம்மைத்