உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

99

அழிவிலிருந்தே பிறப்பது. அதுபோல வாய்மை நோக்கி முன்னேறும் ஒவ்வொரு படியும் அதன் நெறிபிறழ்ந்து செல்லும் ஒவ்வொரு படியின் பின்னேற்றத்தின் விளைவேயாகும்.

களை நீக்கமே பயிரின் ஆக்கம்

புதிய ஆடை விரும்புபவன் பழைய கந்தலாடையை நீக்கி யாக வேண்டும். மெய்மை நாடுபவன் பொய்மை விலக்கியாக வேண்டும்.நற்பயிர் வளர்க்கும் தோட்டக்காரன் முதலில் அவப்பயிர் அல்லது களையகற்றாமலிருக்க முடியாது. அறிவுடைய தோட்டக்காரன் பறித்த களைகளை எறிந்துவிட மாட்டான். அவையே நற்பயிருக்கு உரம் என்பதை அவன் அறிவான். களையின் மக்கிய அழிவு பயிருக்கு நல்லுரமாவது போல, பொய்மைகளின் பயனான அனுபவ அறிவே மெய் யுணர்வை வளர்க்கும் திறமுடையதாகும். வளர்ச்சி ஊக்கம் இங்ஙனம் தளர்ச்சி - நீக்கம் ஆகியவற்றின் விளைவாகின்றன.

மெய்யான வாழ்வு, இன்பம், உணர்ச்சி வேகங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகாத நல்லமைதியின் பயனாக வருவது. இதனை அடையத் தியாகம், துறவு மிக மிக அவசியம். புறப் பொருள்களைத் துறக்கும் துறவு இவ்வகையில் பயன்பட மாட்டாது. ஏனெனில் அது போலித் துறவு ஆகும். சோற்றைத் துறந்தவன் பசியைத் துறந்தவனென்றோ, தண்ணீரைத் துறந்தவன் விடாயைத் துறந்தவனென்றோ கூறுவது மடமை. அத்துறவுகள் பசியையும் விடாயையும் வளர்க்குமேயன்றித் தணிக்க மாட்டா. புறப்பொருளுக்குச் சரியான அகக் கூறுகளான அவாக்களைத் துறப்பதே, அடக்கியாள்வதே உண்மைத் துறவு, உண்மைத் தியாகம் ஆகும். அக அவா ஒவ்வொன்றும் ஓர் அகப் பிழையாக, 'மனத்துக்கண் நிலவும் மா'சாக இயலுவது. வாழ்வில் துன்பம் உண்டுபண்ணுபவை இந்த அக அவாக்களே.

துறக்க வேண்டுபவை மெய்யான நலங்களோ வாய்மை களோ அல்ல தீங்குகள், பொய்மைகள் - மெய்யானவை போலத் தோன்றும் போலி நலங்கள், போலி வாய்மைகளையே. வாய்மை துறப்பவன் வாய்மை பெறுவான், நலந் துறப்பவன் நலம் பெறுவான் என்ற முரணுரை வாய்மையின் திறவு இதுவே. தன்னலமுடைய எதுவும் துறக்கப்படும்போது, துறக்கப்படுபவை