128
அப்பாத்துரையம் - 29
பண்பாளர், சான்றோர் அமைக்கும் அன்புக் கோயிலின் திருப்பணியில் இங்ஙனம் தமக்கெனப் பண்பையும் சால்பையும் வகுத்துக் கொள்ளாதவர்களும் ஈடுபடுகிறார்கள். பிறர்க்கே வாழ்ந்து போராடிய அவர்கள் வாழ்வின் முதிர்ந்த பகுதி இங்ஙனம் பிறரையும் தம்முடன் ஈடுபடுத்திய வாழ்வு ஆகிறது.
பண்பாளர் தமக்காக ஆற்றிய, இன்னும் ஆற்றி வருகிற போரின் விழுப்புண்களை புறஉலகத்தவர்கள் அறிவதில்லை. அதில் பங்குகொள்ள வேண்டும். கடமையையும் உணர்வதில்லை. அதை அறிந்து அவ்வழியில் ஒவ்வொருவரும் நிற்கும்நாளே அவரவர்க்குரிய புதுவாழ்வுப் பெருநாள், பெருவாழ்வுப் புது
நாள்!
போரின் பண்பு காணாமலே, அதன் வெற்றி வீரரின் பண்பில் ஈடுபடும் பொதுமக்கள் அவரைப் போற்றுகின்றனர். அவர் புதுவாழ்வில் திடுமெனப் புதிய இனிமையும் மென்மையும், உறுதியும் தன்னம்பிக்கையும், பொறுமையும் ஏற்பட்டு விட்டதைக் காண்கின்றனர். தங்கள் துன்பங்களில் அவர்கள் துணை பெருநலம் தருவது என்றும் உணர்கின்றனர். அவர் களிடம் ஆறுதலும், அவர்கள் மூலம் ஓய்வும் பெறுகின்றனர். இதற்கு ஈடான பரிசு யாது? ஆனால் இவ்வளவு அவர்களைப் போற்றியும் அவர்கள் பண்புக்குக் காரணமான போராட்டங் களை - சிறு தன்மறுப்புக்களை - காணாததாலேயே அவர்கள் அதில் ஈடுபடுவதில்லை.
செல்லல் நீக்கும் இன்ப இளவேனிலகம்
அன்பின் மணத்துக்குமுன் புகழ் எம்மாத்திரம்? ஆர்வத்தின் ஆற்றலுக்குப்பின் மற்றப் பெருமைகள் எம்மட்டு? தன்னலமற்ற சேவையின்முன் பெருமையுடையவர்கள் அறிவும் திறமும் ஆற்றலும் எத்தகையவை? அன்புக்கு ஏற்ற விலை, பரிசு அன்பன்றி வேறில்லை. கொடுப்பவரும் கொள்பவரும் சரிநிலைப்படுத்தும் பண்பு, இருவருக்கும் சரிசமமாகப் பயன்படும் பண்பு, திசையும் ஒருங்கே ஆதாயம் பெருக்கும் பண்பு வேறில்லை. அதனால் பெறும் இன்பம் கரையற்றது, களங்கமற்றது. அது பேரின்ப ஒளி; ஏ னனில் மற்ற இன்பங்களைப் போல், ஒளிகளைப் போல் அது எல்லையுடையதல்ல. மற்றவற்றைப் போல துயரளாவும் இன்பமல்ல, நிழலளாவும் ஒளியல்ல, அது.
ரு