உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(144) ||.

அப்பாத்துரையம் - 29

முழு நிறைவுடைய மனிதரல்லர்; பழியுடன் பண்பும் கலந்து செயலாற்றும் பொதுநிலை மாந்தர்கூட அல்லர். சங்கிலிக் கோவையின் வலு வலிமை மிக்க இந்தக் கண்ணிகளின் வலு வன்று. அதன் கடைநிலைக் கண்ணியான பழிகாரன் வலுவே. அவன் முன்னேறினால் அனைவரும் முன்னேறுவர். நேர்மாறாக அனைவரும் முன்னேறினால் அவன் முன்னேறுவான் என்று கூற முடியாது.

-

'பழிகாரருக்காகவே நான் பிறப்புற்றேன் அவர் களுக்காகவே என் வாழ்வு' என்று இயேசுபிரான் கூறியதன் பொருள் இதுவே. பழிகாரர் திருத்தத்திலேயே உலகின் திருத்தம் அடங்கியுள்ளது.

பழிகாரன் பழி மிகுந்தோறும், பெரிதாகுந்தோறும், அவனிடம் உள்ள இனத் தேவை, அவனிடம் ஞானிக்குள்ள இனக் கடமை பெரிதாகிறது. 'நேர்மையாளரை, பண்பாளரைத் தன்னிரக்கப்படும்படி அழைக்க நான் வரவில்லை; பழிகாரரை அவ்வழி கூவியழைக்கவே நான் வந்தேன்' என்றார், மனித இனத் தேவை முழுவதையுந் தன்கடனாகக் கொண்ட தண்ணளியாளர்! அன்பு எல்லாருக்கும் பொது உரிமையுடையதே.ஆயினும் சிறப்பு வகையில் அதைத் தீயவர், வலிமை குறைந்தவர், பழிகாரர் ஆகியோருக்கே காட்டும் கடப்பாடு நமக்கு உண்டு. நேர்மை யாளர்களிடம் அன்பு செலுத்த நேர வாய்ப்பு இல்லாவிட்டால் கூட, அவர்களை விடுத்து, அவர்களுக்கு மேம்பட்ட முத லுரிமையையும் முன்னுரிமையையும் பழிகாரருக்கே அளித்தல் தவறன்று; அதுவே பொருத்தமான செய்தி ஆகும்.

பழிகளுக்கெல்லாம் அடிப்படையான பழி, பழிகாரனைப் பழிப்பதே!

ன்

பழிகாரரிலும் முரண்பட்ட மோசமான பழிகாரனை மற்றப் பழிகாரர்கள் கண்டிப்பர், வெறுத்தொதுக்குவர். தாமும் அவன் நிலையிலேயே இருப்பதைக்கூட அவர்கள் மறந்து, அவனுடன் ஒத்துணர்வுகொள்ள மறுப்பர். தம்மைப் பழிகாரர் என்று மற்றவர்கள் கண்டிப்பதை ஆதரிப்பவர்கள் போலவே, அவர் களும் அவனைத் தம்மிடையே ஒரு பழிகாரன் எனக் கண்டிப்பர். ஆனால் பழிகாரனை வெறுத்து ஒதுக்குவதுதான் பழிக்