உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

பழிகளின் நச்சுக்கனி - பொறாமை

149

ஒத்துணர்வு இன்னொரு திசையிலும் செயலாற்றக்கூடும். துன்பத்தில் அது துணையாவதுபோல, இன்பத்திலும் பங்கு கொள்ள முடியும். நம்மைவிட வாழ்க்கைப் படியில் உயர்ந் துள்ளவர், இன்பவாழ்வு கைவரப் பெற்றவரிடம் காட்டும் ஒத்துணர்வு இன்பவாணரை இன்பத்தில் ஊக்குவதாகவே அமையும். ஆனால் அகப் பண்புடையவர் பிறர் துன்பத்தைத் தம் துன்பமாக எண்ணுவதுபோல, இங்கும் பிறர் இன்பத்தைத் தம் இன்பமாகக் கொண்டு மகிழ்கின்றனர். இஃது இயல்பே. ஆனால் இதே இடத்தில் அக அமைதி அடையாதவன் நிலையை எண்ணிப் பார்த்தால், இதன் முழு அருமையும் விளங்கும். அத்தகையவன் பழிகாரன் துன்பத்தில் ஒத்துணர்வு காட்டாமல் அவனை வெறுத்து ஒதுக்க முற்படுகிறானென்றால், இன்ப வாழ்விலும் அது போலவே வெறுப்பைப் பொறாமையாக்கிக் கொள்கிறான்.

பொறாமை சில சமயம் பகைமையாக, தீராப் பகைமை யாகிய வன்மமாக உருவெடுக்கிறது. பழிகாரனை வெறுத் தொதுக்குவது பழிக்கு வித்து என்றால், இது பழியின் கனியாகும். பழிகாரனை மட்டுமே பழித்து, பழிகாரனைப் பழித்து ஒதுக்குபவரைக் கண்டிக்காத அறவோர் கூடப் பொறாமை, பகைமை, வன்மம் ஆகிய தீப்பண்புகளை வன்மையாகக் கண்டிக்கத் தயங்கவில்லை. ஏனென்றால் அவை உடனடியாக, மேலீடாகவே காணத்தக்க பெருந்தீமைகள் ஆகும். அக அமைதி யற்றவனின் இக்கீழ்த்தரப் பண்புகளை நோக்க, அக அமைதி யாளனின் ஒத்துணர்வு எவ்வளவு உச்ச உயர்பண்பு என்பது வெளிப்படும்.

இன இழிவின் சின்னமே பொறாமை

பொறாமை தானே கெடுபண்புமட்டுமன்று, அது பல கெடு பண்புகளின் முதிர்ச்சி - அதைப் பழிகளின் நச்சுக்கனி என்று நாம் கூறுவதன் காரணம் இதுவே. பொறாமையுடையவன் பிறர் இன்பம் பொறாதவன், அதனுடன் போட்டியிட்டு மேம்படுவதை எண்ணுபவன்கூட அல்லன் - அதை அழிக்கத் துணிபவன்.எனவே அவன் பொறாமை அப்பொறாமை உணர்ச்சிக்கு ஆளான