உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

165

ஐவகை மணங்களாக அவை அவன் உள்ளத்தில் கமழ் கின்றன. அவற்றில் முதன்மையான மணம் அன்பின் மணமே. அது தரும் இன்பம் அவனிடம் நிலையான அமைதி உண்டு பண்ணுகிறது. அவன் உள்ளக்கனிவு அவனை எளிதில் சுற்றிலு முள்ள பிற உயிர்களுடன் தோழமை கொள்ளத் தூண்டுகின்றது. இத் தோழமை இன்பம் அவனுக்கு இன்பம் பெருக்குகிறது. மூன்றாவதாக அன்பினால் ஏற்படும் அமைதி அவனுக்குத் தெளிவும் மெய்யுணர்வும் அளிக்கிறது. நான்காவதாக, தற் பெருமை, உணர்ச்சி வெறிகள் அவனைத் தாக்குவதில்லை. பண்பும், பணிவும் அவன் சூழலை முழுதும் அவன் வயமாக்கு கின்றன. கடைசியாக, அவன் அன்பும் பாசமும் மற்ற உயிர்க ளிடமிருந்து அன்பையும், பாசத்தையும் தூண்டுகின்றன. இது அவன் இன்பச் சூழல் பெருக்குகிறது.

மீளா நரகமும் இங்கே, மாளாத் துறக்கமும் இங்கேதான்!

பொறுத்தருளும் பொற்பண்பு இல்லாத காரணத்தினால் இன்றைய உலகில் மிகப் பலர் வெந்துயருக்கு ஆளாகி அவதி யுறுகிறார்கள். மற்றத் துயரங்களைவிட இது மிகவும் நச்சுத் தன்மை உடையது.ஏனெனில் துயருக்கு ஆளாவோர் துன்புறினும் தாம் துன்புறுவதாக எண்ணுவதற்கே நேரமில்லாமல் அவர்கள் துன்பத்தில் உழல்கிறார்கள். துன்பப் புயலிலிருந்து துன்பப் புயலுக்கு இழுத்து அடித்துச் செல்லப்படும் அவர்களுக்குத் துன்பத்தைப் பற்றி எண்ணுவதற்குக்கூட இடை டை ஓய்வோ,சிறு பொழுது அமைதியோ ஏற்படுவதில்லை. உண்மையில் பொறுதி யின்மையால் தமக்கு விளையும் துன்பத்தின் அளவை அவர்கள் மதிப்பிட்டறிவதுகூட அப்பொறுதியின்மைப் பண்பை வென் றடக்கிய பின்தான் கைகூடுகிறது.

மீளா நரகம் என்று ஒன்று இருக்கக்கூடுமானால், அது இப்பொறுதியில்லாப் பண்பே. இதன் கொடுங்கோன்மையி லிருந்து தப்பிப் பிழைத்து, பொறுத்தருளும் பொற்பின் செங்கோன்மையை அணுகியவன் உண்மையில் கண்காணாத் துன்பவலையின் சிக்கல்களிலிருந்து விடுபட்டு, கண்காணா இன்பப் பாயலில் திளைக்கத் தொடங்குகிறான். துன்பத்தை நினைக்க நேரமில்லாத் துன்பத்திலிருந்து, இன்பந் தவிர எதுவும்